தமிழக சிறைகளில் கைதிகளுக்கு போன் வசதி!

தமிழக சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு தொலைபேசி வசதியை வழங்குவதற்காக, ரூ.1.50 கோடி செலவில் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மொபைல்போன்கள் பயன்படுத்துகிறார்கள் என்று புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சனையை தடுக்க காவல் துறை உயர் அதிகாரிகளால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் சிறைச்சாலைகளில் உலவும் மொபைல்போன்களை
கட்டுப்படுத்த முடியுவில்லை. இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
சிறைச்சாலை கைதிகளுக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்தி தர உள்ளது காவல் துறை. இதன் மூலம் அதிகார வரம்பை மீறி, அதிகாரிகளுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வரும் செல்போன் நடமாட்டத்தை குறைக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த புதிய வசதி தமிழக சிறைச்சாலைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1.50 கோடி செலவில் தொலைபேசி வசதி எல்காட் நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கண்கானிப்பாளர் முன்பு தான் பேச வேண்டும் என்ற கட்டளையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வசதியில், காலர் ஐ.டி வசதி, ஓப்பன் மைக், ரெக்கார்டிங் வசதி என்று அனைத்தும் உண்டு. இதனால் சிறைச்சாலைகளில் செல்போன் நடமாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications