Home
News

மகத்தான முன்னேற்றம்- ரூ.2770 கோடிக்கு இந்திய தயாரிப்பு பிரம்மோஸ் ஏவுகணை ஆர்டர் செய்த பிலிப்பைன்ஸ்!

பிரம்மோஸ் என்பது இந்திய கடற்படை போர்க்கப்பல்களின் முக்கிய ஆயுத அமைப்பாகும், மேலும் இந்த ஏவுகணை அதன் அனைத்து மேற்பரப்பு தளங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரம்மோஸ் ஏவுகணையானது 2.8 மேக் வேகத்தில் அதாவது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும். பிலிப்பைன்ஸ் தனது கடற்படைக்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பிரோம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்

பிரோம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்

பிலிப்பைன்ஸ் வெள்ளிக்கிழமை (நேற்று) தனது கடற்படையின் ஏவுகணை அமைப்பை மேம்படுத்த பிரோம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இந்த திட்டமானது 374.9 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த அறிவிப்பு பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்புத் துறையால் பிரம்மோஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு துறையானது பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு "நோட்டிஸ் ஆஃப் அவார்ட்" அறிவிப்பை வெளியட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி

இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான முதல் ஒப்பந்தம் மூலம் அடுத்தடுத்த பிற ஆசிய நாடுகளும் இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகுக்கும் என கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் கடலோர பாதுகாப்புக்கானதாகும். இதேபோல் இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை மேம்பட்ட நிலையில் இருப்பதாக அதன் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது என தனியார் செய்தித்தளம் ஒன்று தெரிவிக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மோஸ் ஏவுகணை சோதனையானது கப்பலில் இருந்து கப்பலை அதிகபட்ச வரம்பில் குறிவைத்து தாக்கி செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை மிக துல்லியமாக இலக்கை தாக்கியது. இந்த தகவலை டிஆர்டிஓ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மேற்கு கடற்கரை

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மேற்கு கடற்கரை

இந்த தகவலை இந்திய கடற்படை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில் இந்திய கடற்படை நாசகார கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மேற்கு கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. கடல் டூ கடல் வரையிலான இலக்கில் அதிகபட்ச வரம்பு நிர்ணயித்து சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை மிக துல்லியமாக தாக்கியது. நாட்டின் அதிநவீன நாசகார கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகவும் இந்த ஏவுகணை வைக்கப்பட்ட இலக்கில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை துல்லியகமாக தாக்கி அழித்தது என டிஆர்டி மற்றொரு டுவிட்டில் குறிப்பிட்டுள்ளது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை

ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததை இந்திய கடற்படை பாராட்டியது. ஒலியை விட வேகமாக பயணிக்கும் பிரமோஸ் ஏவுகணை முப்படையினரும் உபயோகிக்கும் வகையில் இருக்கிறது. காரணம் ராணுவம், விமானப்படையினர் முன்னதாக இந்த ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கடற்படை இந்த சோதனையில் கடல் டூ கடலில் இலக்கு நிர்ணயித்து நடத்தப்பட்ட சோதனையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.

நீருக்கு அடியில் இலக்கை நிர்ணயித்து தாக்குதல்

நீருக்கு அடியில் இலக்கை நிர்ணயித்து தாக்குதல்

இதேபோல் நீருக்கு அடியில் இலக்கை நிர்ணயித்து அதை தாக்கி துல்லியமாக அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடல் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரம்மோஸ் ஏவுகணை முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏவுகணையை ஏவிய பிறகும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நகர்ந்தால் இருப்பிடத்திற்கு ஏற்ப திசைமாறி தாக்கும் திறன் கொண்டதாகும்.

200 கிலோ வரை எடை கொண்ட வெடிகுண்டு

200 கிலோ வரை எடை கொண்ட வெடிகுண்டு

இந்த ஏவுகணையின் எடையானது 3000 கிலோவாகவும், 2 அடி விட்டமும், 28 அடி நீளமும் கொண்டதாகும். இந்த ஏவுகணையில் 200 கிலோ வரை எடை கொண்ட வெடிகுண்டை வைத்து ஏவ முடியும். இந்த ஏவுகணையானது 800 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும். இது இரட்டை சாதனை எனவும் அது கடற்படையின் போர் அமைப்பு மற்றும் ஆயுத வளாகத்தின் துல்லியத்தை மேம்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை கடற்படை மற்றும் நாட்டிற்கு வழங்கும் புதிய திறனை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் என்பிஓஎம் இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இது நவீன கால போர்க்களங்களின் பெரும் தடுப்பு ஏவுகணை ஆகும். இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை ஆனது கடல், நிலம் மற்றும் வான் இலக்குகளுக்கு எதிராக அதன் வலிமையை நிரூபித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Phillippines Make Agreement with India For Brahmos Missile For its Navy: First Export Order
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X