உங்க வீடே தியேட்டராகும்! ஏரியாவையே அலறவிடும் புது Philips சவுண்ட்பார் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
ஹோம் தியேட்டர் என்ற வார்த்தைக்கு மிக சரியான அர்த்தத்தை வழங்கக்கூடிய ஒரு புதிய சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக Philips TAB8967 Soundbar என்ற சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய Philips TAB8967 Soundbar சாதனம் டால்பி அட்மாஸ் உடன் வருகிறது. இந்த புதிய சவுண்ட் பார் சாதனத்தை பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது, வாருங்கள் பார்க்கலாம். உங்களுக்கு நீண்ட நாளாக ஒரு தரமான ஆடியோ சிஸ்டத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறதா? அப்படியானால், இந்த Philips TAB8967 Soundbar என்ற குட்டி பையனை நீங்கள் உடனே தூக்கிவிட வேண்டும்.

இந்த பிலிப்ஸ் சவுண்ட் பார் பார்ப்பதற்கு சிறிய வடிவத்தில் இருந்தாலும், இதன் சக்தி டபுள் மடங்கில் இருக்கிறது. இதில் எண்ணற்ற அம்சங்களை பிலிப்ஸ் நிறுவனம் புகுத்தியுள்ளது. டால்பி அட்மாஸ் ஆதரவு, 8-இன்ச் சப்வூஃப்பர், குரோம்கேஸ்ட் (Chromecast), ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple AirPlay 2), ப்ளூடூத் போன்ற பல அம்சங்களை இந்த பிலிப்ஸ் TAB8967 சவுண்ட்பார் கொண்டுள்ளது.
இந்த பிலிப்ஸ் TAB8967 சவுண்ட்பாரில் இரண்டு ரியர் ஸ்பீக்கர்கள் இருப்பதால் பயனர்களுக்கு மிக துல்லியமான மற்றும் உயர் தரம் கொண்ட அதிவேக ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும். பிலிப்ஸின் இந்த புதிய TAB8967 சவுண்ட்பார் மெட்டாலிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. இந்த சவுண்ட்பாரை நீங்கள் வால்-மவுண்ட்டிங் கூட செய்துகொள்ளலாம். அதாவது சுவற்றில் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த புதிய Philips TAB8967 Soundbar-ன் சிறப்பம்சங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த சாதனம் வயர்லெஸ் சப்ஃவூப்பர் உடன் வருகிறது. இந்த Philips TAB8967 Soundbar சாதனம் பிரத்தியேகமான ஆடியோ கண்ட்ரோலிங் ரிமோட் கண்ட்ரோலரைக் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பார் அமைப்பு 3 ஃபிரண்ட் ஃபயரிங் ஸ்பீக்கர், 2 ரியர் ஸ்பீக்கர் மற்றும் 2 அப் ஃபயரிங் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

இந்த Philips TAB8967 Soundbar சாதனம் 780W டைனமிக் சவுண்ட் அவுட்புட் வெளியீட்டை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த சாதனம் 8' இன்ச் சப்ஃவூப்பர் உடன் வருகிறது என்பதனால், ஆடியோவின் பாஸ் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டை மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஏரியாவையும் அதிரவிடும் அளவிற்கு இதில் டீப் பாஸ் அம்சம் இருக்கிறது.
Dolby Atmos மற்றும் Dolby Digital Plus ஆகியவற்றையும் இந்த பிலிப்ஸ் சவுண்ட்பார் ஆதரிக்கிறது. இது 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட் விளைவை அனுபவிக்க உதவுகிறது. பின்னர், இது வயர்லெஸ் இணைப்பிற்காக Chromecast, Apple AirPlay 2 மற்றும் Bluetooth ஆகியவற்றை ஆதரிக்கிறது. பிலிப்ஸ் TAB8967 ஆனது, Dolby Vision, HDR10+ மற்றும் HLG வீடியோ வடிவங்களுடன் 4K வீடியோ பாஸ்-த்ரூ ரெசல்யூஷன் இழக்காமல் தரமான ஆடியோவை ஆதரிக்கிறது.
மியூசிக், மூவீஸ், வாய்ஸ், ஸ்டேடியம் மற்றும் கஸ்டம் போன்ற பல ஈகுவலைசர் மோட்களை ஆதரிக்கிறது. மற்ற இணைப்புகளில் இது HDMI eARC, வழக்கமான HDMI, AUX, ஆப்டிகல் இன்புட் மற்றும் டூயல்-பேண்ட் Wi-Fi போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த பிலிப்ஸ் TAB8967 சவுண்ட்பார் விலை ரூ.44,990 ஆகும். இது இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்குவதற்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications