ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்த பிலிப்ஸ்!

|

பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவி ரேஞ்ச் 2021 வரம்பின் கீழ் இந்தியாவில் பிலிப்ஸ் பிராண்டில் 10 புதிய ஸ்மார்ட்டிவி மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் எச்டிஆர் 10+ ஆதரவு, டால்பி ஆடியோ அனுபவத்தோடு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகள் மற்றும் அம்சங்களோடு கிடைக்கிறது.பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்டிவிகள் தொடரில் நான்கு வெவ்வேறு தொடர்கள் உள்ளன. அவை 8200, 7600, 6900 மற்றும் 6800 தொடர்கள் ஆகும். அதேபோல் இந்த 8200 மற்றும் 6900 தொடர்கள் ஆனது ஆண்ட்ராய்டு ஆதரவோடு வருகிறது. அதேபோல் 7600 மற்றும் 6800 தொடர் ஸ்மார்ட்டிவிகள் சஃபி ஸ்மார்ட் ஓஎஸ் உடன் வருகிறது.

ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவிகள்!

ஆண்ட்ராய்டு டிவிகளில் ஆடியோ மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்தும் அம்சம் இருக்கிறது. இதன்மூலம் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அவ்வப்போதைய செய்திகளை விவரமாகவும் விரைவாகவும் அறிந்துக் கொள்ளலாம். சஃபி இயக்க முறைமை கொண்ட பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவிகள் ஆனது அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்டிவிகளின் மாடல்கள் மற்றும் விலைகள் குறித்து விவரமாக பார்க்கையில், இதில் 8200, 7600, 6900, 6800 ஆகிய மாடல்கள் இருக்கிறது. பிலிப்ஸ் டிவி 8200 தொடரில் 70 அங்குல (70PUT8215)மாடல் விலை ரூ.1,49,990, 65 அங்குல (65PUT8215) மாடல் விலை ரூ.1,19,990, 55 அங்குல (55PUT8215) விலை ரூ.89,990, 50 அங்குல (50PUT8215) விலை ரூ .79,990 ஆகவும் இருக்கிறது.

ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவிகள்!

பிலிப்ஸ் டிவி 7600 சீரிஸ் 58 அங்குல (58PUT7605) மாடல் விலை ரூ.89,990 ஆகவும் 50 அங்குல (50PUT7605) மாடல் விலை ரூ.69,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிலிப்ஸ் டிவி 6900 தொடர் 43 அங்குல (43PFT6915) மாடல் விலை ரூ.44,990 ஆகவும் 32 அங்குல (32PHT6915) மாடல் விலை ரூ.27,990 ஆகவும் இருக்கிறது. பிலிப்ஸ் டிவி 6800 தொடரில் 43 அங்குல (43 பிஎஃப்டி 6815) மாடல் விலை ரூ.35,990 ஆகவும் 32 அங்குல (32 பிஎச்டி 6815) மாடல் விலை ரூ.21,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் டிவி 8200 தொடரின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய அம்சங்களோடு 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளேவுடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் கூகுள் அசிஸ்டென்ட் அம்சத்தோடு வருகிறது. கூகுள் ப்ளே மற்றும் பிலிப்ஸ் டிவி ஆஃப் கேலரி ஆகிய அணுகலும் உள்ளது. இது எச்டி ஆர் 10+ ஆதரவோடு வருகிறது. பி5 பிக்சருக்கு பெர்பெக்ட் எஞ்சின் ஆதரவு இருக்கிறது. இந்த ஆதரவான காட்சி தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த டிவியில் க்ரோம்கேஸ்ட் ஆதரவு, ப்ளூடூத் இணைப்பும் இருக்கிறது.

ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவிகள்!

பிலிப்ஸ் டிவி 7600 தொடர் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது சஃபி ஸ்மார்ட் ஓஎஸ்-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மீடியா தளத்தில் இணைக்கலாம். 7600 எச்டிஆர் 10+ ஆதரவுடனும், 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளேக்கள், டால்பி விஷன் ஆதரவோடு வருகிறது.

ரகம் ரகமா வெவ்வேறு விலையில்: 1 இல்ல 10 மாடல் பிலிப்ஸ் ஸ்மார்ட்டிவிகள்!

பிலிப்ஸ் டிவி 6900 தொடர் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்டு டிவி 8500 தொடரை போல் கூகுள் அசிஸ்டெண்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி டால்பி ப்ளஸ் ஆதரவு மற்றும் பிக்சல் பிளஸ் எச்டி தொழில்நுட்பத்தோடு வருகிறது. க்ரோம்கேஸ்ட் முழு எச்டி மற்றும் எச்டி டிஸ்ப்ளே ரெசல்யூஷன் விருப்பங்களுடன் வருகிறது.

பிலிப்ஸ் டிவி 6800 தொடர் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது எச்டி மற்றும் முழு எச்டி ப்ளஸ் காட்சி தெளிவுத்திறனை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் சஃபி ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் எச்டிஎம்ஐ ஆதரவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் திரையை பிரதிபலிக்கு மிரர்காஸ்ட் ஆதரவு விருப்பம் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Philips Launched its 10 Model Smart TVs with Variant Sizes and Prices

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X