Home
News

UPI, ATM வழியாக PF பணம் எடுக்க வருது 3 மாற்றம்.. புது ஆப், பேங்க் அக்கவுண்ட் லிங்க், கட்டாய மினிமம் பேலன்ஸ்!

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது, சந்தாதாரர்கள் தங்கள் பிஎப் கணக்குகளிலிருந்து யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) மூலம் பணத்தை எடுக்கும் வசதியை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அரசு வட்டாரங்களின்படி, இபிஎப்ஓ ​​தனது சர்வர் சேவைகளை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் (blackout) திட்டமிட்டு உள்ளது. "யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பதற்கான வசதிகளை செயல்படுத்தும் வகையில் சர்வர்களை புதுப்பிப்பதற்காக, இபிஎப்ஓ-வின் அனைத்து செயல்பாடுகளும் 3 நாட்களுக்கு நிறுத்தப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் மணிகண்ட்ரோலிடம் (Moneycontrol) தெரிவித்துள்ளார்.

UPI, ATM வழியாக PF பணம் எடுக்க வருது 3 மாற்றம்!

தற்போது, யுஏஎன்(​​UAN) போர்டல் மூலம் ஆன்லைனில் இபிஎப்ஓ ​​பணத்தை எடுக்க முடியும் என்றாலும், யுபிஐ வழியாக பணத்தை எடுப்பதற்கான வசதி இல்லை. இதற்காக வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஒரு புதிய ஆப்பையும் (App) அறிமுகப்படுத்தவுள்ளது. இது சந்தாதாரரின் வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.

மேலும், இது பீம் (BHIM) ஆப் மற்றும் பிற யுபிஐ ஆப்களுடனும் இணைக்கப்படும். "சந்தாதாரர்கள் தங்கள் இபிஎப்ஓ ​​கணக்கில் உள்ள இருப்பில் 75 சதவீதம் வரை தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு எடுத்துக்கொள்ள முடியும்" என்று அதிகாரி ஒருவர் கூறி உள்ளார் என்றும் மணிகண்ட்ரோல் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய விதிகளின்படி, சந்தாதாரரின் கணக்கில் இபிஎப் இருப்பில் (EPF Balance) குறைந்தது 25 சதவீதமாவது இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கட்டாய குறைந்தபட்ச இருப்பை (mandatory minimum balance) தக்கவைத்துக்கொண்டு, உறுப்பினர்கள் தங்கள் இபிஎப் நிதியில் 75 சதவீதம் வரை இப்போது எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இபிஎப்ஓ-வின் மொத்த நிதி இருப்பு சுமார் ரூ. 26 லட்சம் கோடியாக உள்ளது; அதேவேளையில், பங்களிப்பு செய்யும் செயலில் உள்ள சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 7.5 கோடியாக உள்ளது. தற்போது இபிஎப்ஓ-வில் சுமார் 30 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிஎப் பணத்தை எடுக்க திட்டமிடும் ஊழியர்கள், அதை செய்வதற்கு முன்பாக தங்களுடைய இபிஎப்ஒ அக்கவுண்ட்டில் கீழ்வரும் விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்: சர்வீஸ் ஹிஸ்டரி (Service history): பலமுறை வேலை மாறிய ஊழியர்கள், இபிஎப்ஒ இணையதளத்தில் உள்ள சர்வீஸ் ஹிஸ்டரி பகுதியை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பிஎப் பேலன்ஸ் உடன் கான்ட்ரிபியூஷனையும் கண்காணிக்கவும்: பெரும்பாலான உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பிஎப் இருப்பை மட்டுமே சரிபார்க்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு மாதமும் பங்களிப்புகள் சரியாக செலுத்தப்படுகின்றனவா என்பதை அரிதாகவே சரிபார்க்கிறார்கள்

நாமினி விவரங்களை (nominee details): பல ஊழியர்கள் பணியில் சேரும்போது நாமின செயல்முறையை முடித்துவிட்டு, அதை மீண்டும் பார்ப்பதே இல்லை. இ-நாமினி வசதி மூலம், உறுப்பினர்கள் ஆன்லைனில்நாமினி விவரங்களை சேர்க்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

கேஒய்சி (KYC) தகவல்: பிஎப் தொடர்பான பரிவர்த்தனைகளில் தாமதங்களுக்கான பொதுவான காரணங்களில் கேஒய்சி தொடர்பான சிக்கல்களும் அடங்கும். ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஊழியர்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்

ப்ரொபைல் பொருத்தமின்மைகள்: இபிஎப்ஓ பதிவுகளுக்கும் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒரு கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது மட்டுமே பெரும்பாலும் வெளிப்படுகின்றன. உறுப்பினர்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தனிப்பட்ட தகவல்களை மதிப்பாய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் திருத்தங்களை செய்யவும்.

வேலை மாறிய பிறகு பிஎப் பரிமாற்றங்கள்: வேலையளிப்பவரை மாற்றுவது, முந்தைய நிறுவனங்களின் பிஎப் நிலுவைகள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கு தானாகவே உத்தரவாதம் அளிக்காது. பரிமாற்ற கோரிக்கைகளை சமர்ப்பித்த ஊழியர்கள், இபிஎப்ஒ இணையதளம் மூலம் தங்கள் நிலையைக் கண்காணித்து, முந்தைய வேலையிலிருந்து நிலுவைகள் சரியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும்

Best Mobiles in India

English summary
PF withdrawals via UPI ATM come to effect by this month end EPF plans 3 day server blackout Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X