பேங்க் அக்கவுண்ட்டுக்கு ரூ.1,000 கிளைம் ஆனாலும், இந்த 5 விஷயங்கள் சரியாக இருக்கனும்.. PF அக்கவுண்ட் இருக்குல?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது உறுப்பினர்கள் தங்ளது பிஎஃப் (PF) பணத்தை நேரடியாக யுபிஐ (UPI) மூலம் எடுப்பதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இனி குறிப்பிட்ட தொகையை, யுபிஐ பின் (UPI PIN) மூலம் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும்.
5 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை தானியங்கி முறையில் (Auto Settlement) விரைவாக வழங்கும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உடனடி டிஜிட்டல் சேவையை பெறுவதற்கு ஊழியர்களின் பிஎஃப் விவரங்கள் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். பிஎஃப் பணம் எடுப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு விதிகளை விட, கணக்கில் உள்ள தவறுகளே முக்கிய காரணமாக உள்ளது.

யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்யாமல் இருப்பது, ஆதார் மற்றும் பான் விவரங்களில் பிழைகள் இருப்பது, பேங்க் அக்கவுண்ட்டில் மொபைல் நம்பரை இணைக்காமல் இருப்பது, யுபிஐ ஐடியை ஓப்பன் செய்யாமல் வைத்திருப்பது உள்ளிட்ட முக்கியமான 5 விஷயங்களை கவனிக்க வேண்டும். ஆகவே, இப்போது ஊழியர்கள் சரிசெய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதோ:
1. யுஏஎன் (UAN) எண்ணை உடனே செயல்படுத்துங்கள்:
பிஎஃப் கணக்கின் முதன்மை அங்கமான யுஏஎன் (Universal Account Number) எண் செயல்பாட்டில் (Active) இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாஸ்போர்ட் மாற்றுவது, புதிய மொபைல் எண் இணைப்பது போன்றவற்றை இப்போதே ஆன்லைன் போர்ட்டலில் செய்து முடிப்பது நல்லது. அவசர காலத்தில் பணத்தை எடுக்கும்போது கடவுச்சொல் (Password) மறந்துவிட்டால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.
2. ஆதார், பான் மற்றும் பெயர் விவரங்களை சரிபார்க்கவும்:
யுஏஎன் கணக்குடன் ஆதார் எண் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் தந்தையின் பெயர் ஆகியவை ஆதார், பான் (PAN) கார்டு மற்றும் நிறுவன ஆவணங்களில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எழுத்துகளில் பிழை அல்லது மாற்றம் இருந்தால் யுபிஐ வழியிலான சரிபார்ப்பு தோல்வியடையும். மேலும், பான் கார்டு சரியாக புதுப்பிக்கப்படாவிட்டால், பிஎஃப் பணத்திற்கு அதிக டிடிஎஸ் (TDS) வரி பிடிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
3. சரியான வங்கி கணக்கை இணையுங்கள்:
யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு உங்களது வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு மிகவும் முக்கியம். பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள உங்களது சம்பள கணக்காக இருப்பது நல்லது. கணக்கு முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது கூட்டுக்கடனாக (Joint Account) இருந்து பெயர் மாறினாலோ பணம் வராமல் நிராகரிக்கப்படலாம்.
4. மொபைல் எண் மற்றும் யுபிஐ ஐடியை தயார் நிலையில் வைக்கவும்:
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஓடிபி (OTP) மற்றும் ஆன்லைன் அங்கீகாரத்தை நம்பியே செயல்படுகின்றன. எனவே, உங்களது ஆதார் எண், யுஏஎன் கணக்கு மற்றும் யுபிஐ ஐடி ஆகிய மூன்றிலும் ஒரே மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சாதனங்களை மாற்றியிருந்தால், யுபிஐ செயலி தடையின்றி இயங்குவதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ளவும்.
5. பிஎஃப் இணைப்பு மற்றும் உறுப்பினர் விவரங்களை புதுப்பிக்கவும்:
முந்தைய நிறுவனங்களில் நீங்கள் பணியாற்றிய கால விவரங்கள், விடுபட்ட விடுவிப்பு தேதி (Date of Exit) போன்றவற்றைச் சரிசெய்து, பழைய பிஎஃப் கணக்குகளை தற்போதைய யுஏஎன் எண்ணுடன் இணைக்க வேண்டும். அதேபோல், இ-நாமினேஷன் (e-Nomination) எனப்படும் வாரிசுதாரர் விவரங்கள் முழுமையாக இருக்க வேண்டும். அண்மையில் திருமணமானவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் மாற்றம் உள்ளவர்கள், வாரிசுதாரர் பக்கத்தை இப்போதே புதுப்பிப்பது அவசர காலங்களில் பெரிதும் உதவும்.


Click it and Unblock the Notifications