2026 புத்தாண்டில் EPFO பயனர்களுக்கு கிடைக்கும் இரண்டு முக்கிய வசதிகள்.. இனி சிக்கல் இருக்காது.. இதோ விவரம்!
2026 புத்தாண்டை முன்னிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இரண்டு முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-கள் மற்றும் UPI மூலம் தங்கள் வைப்புத்தொகையை எடுக்க அரசாங்கம் அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இனி உங்களது பிஎப் நிதியை எடுக்க ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது அடிக்கடி அலுவலக வருகைகள் தேவை இருக்காது. அதன்படி பிஎப் கணக்குகளை வங்கிகள் மற்றும் ஏடிஎம்-களுடன் இணைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இது அவசரக்காலத்தில் நிதி எடுப்பதை மிகவும் எளிதாகவும் வேகமாக மாற்றும்.

சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு நிகழ்வில் இந்த திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அப்போது பிஎப் அணுகலை எளிதாக்குவதிலும், அதை மிகவும் திறமையாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் விளக்கினார். அதபோல் பிஎப் நிதிகள் ஊழியர்களின் தனிப்பட்ட நிதிகள், எனவே அவற்றை எடுப்பதில் இருக்கும் தடைகள் நீக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர் கூறிய தவலின்படி, PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-கள் மற்றும் UPI மூலம் பணம் எடுக்கும் முறை மார்ச் 2026 க்கு முன்பு செயல்பாட்டுக்கு வரும் எனவும், இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஎப் நிதியை எடுக்க, கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் கோரிக்கை செயல்படுத்தப்பட்டு, நிதி அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் சரிபார்ப்பு மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த செயல்முறை பெரும்பாலும் தாமதமாகிறது.
இதுதவிர சில நேரங்களில் சிறிய பிழைகள் காரணமாக கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. தற்போது முன்மொழியப்பட்ட ஏடிஎம் மற்றும் யுபிஐ அடிப்படையிலான அமைப்பு இந்த காத்திருப்பு நேரத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது மக்களுக்கு கணிசமான எளிதாக்கும் தேவைக்கேற்ப நிதியை எடுக்க அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முன்பு தகுதி காலம் வெவ்வேறு காரணங்களுக்காக மாறுபட்டது. ஏழு ஆண்டுகள் வரை சென்றது. இப்போது அனைத்து பணம் எடுப்பதற்கும் இது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ஒரு வருடச் சேவையை முடித்த பிறகு ஒரு ஊழியர் ஒரு பெரிய தொகையை எடுக்க முடியும்.

அதுவும் ஒரு ஊழியர் வேலையில்லாமல் போனால், அவர் உடனடியாக பிஎப்-ல் இருந்து 75 சதவீதம் திரும்பப் பெறலாம். இதில் பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். மீதமுள்ள 25 சதவீதம் ஒரு வருடத்திற்குப் பிறகு திரும்பப் பெறலாம். அதேபோல் 55 வயதிற்கு பிறகு ஓய்வு, தன்னார்வ ஓய்வூதியம் அல்லது வெளிநாட்டில் நிரந்தர குடியேற்றம் போன்ற சூழ்நிலைகளிலும் முழு PF திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவரும் புதிய விதிகள் பல மில்லயன் கணக்கான ஊழியர்களுக்குப் பயனளிக்கும். மேலும் உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போல் மிக எளிதாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








