பிஎஃப் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதை செய்யலனா சேவை பெறுவதில் சிக்கல் வரும்., இந்த மாதம்தான் கடைசி!

|

வருங்கால வைப்பு நிதியம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இபிஎஃப் கணக்கை ஆதார் உடன் இணைக்க வேண்டும் எனவும் அதற்கான காலக்கெடு இந்த மாதம் இறுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப் ஆதார் இணைத்தல்

இபிஎஃப் ஆதார் இணைத்தல்

இபிஎஃப் ஆதார் இணைத்தல் சமூக பாதுகாப்பு 2020-இன் 142-வது பிரிவில் சமீபத்திய மாற்றம்படி பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதை இணைக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வைப்புத் தொகை வரவு வைக்கக் கூடாது என உத்தரவு

கணக்கில் வைப்புத் தொகை வரவு வைக்கக் கூடாது என உத்தரவு

பிஎஃப் கணக்கில் ஆதார் இணைக்காத பட்சத்தில் மாதந்தோறும் செலுத்தப்படும் நிறுவனத்தின் பங்கு தொகை பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் வைப்பு செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் யூஏஎன் எண் உடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது இதன்மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யூஏஎன் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு

யூஏஎன் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு

யூஏஎன் ஆதார் உடன் இணைக்காத பட்சத்தில் நிறுவனத்தின் பங்களிப்பு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படாது என உத்தரவிடப்பட்டுள்ளது. யூஏஎன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது, இணைக்காத பட்சத்தில் பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

இணைப்புக்கான வழிமுறைகள்

இணைப்புக்கான வழிமுறைகள்

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும்.

இந்த இணையதளத்துக்குள் சென்றதும் யூஏஎன் எண், கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்டவைகளை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்.

இதில் மேலே மூன்று கோடு (மெனு) காட்டப்படும் இதை கிளிக் செய்ய வே்ண்டும். கிளிக் செய்து உள்ளே நுழைந்ததும் மேனேஜ் (Manage) என்பதை கிளிக் செய்து கேஒய்சி (KYC) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

உடனடியாக இணைத்துவிடவும்

உடனடியாக இணைத்துவிடவும்

இந்த தேர்வுக்குள் சென்றதும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளலாம். அப்படி இணைக்காத பட்சத்தில் அதில் ஆதார் என்ற வார்த்தைக்கு அருகில் இடம் காலியாக காட்டப்படும்.

அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதார் எண் பதிவிட்ட பிறகு Save என்ற தேர்வை கிளிக் செய்யவேண்டும். இதன்பிறகு இபிஎஃப் தரப்பில் இருந்து கேஒய்சி அப்டேட் செய்ய சிறிது காலம் எடுத்துக் கொள்ளும்.

பிறகு தங்களது பெயர், பிறந்தநாள் ஆகியவைகள் சரிபார்க்கப்படும். உங்களின் அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் கேஒய்சி பதிவிட்ட கோரிக்கை அப்ரூவ் செய்யப்படும். பின் யூஏஎன் பதிவிட்டு கணக்கு ஓபன் செய்தவுடன் ஆதார் எண் வெரிஃபைட் என காண்பிக்கப்படும்.

தங்களது இபிஎஃப் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்காதபட்சத்தில் மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி உடனடியாக ஆதார் எண்ணை யூஏஎன் எண்ணுடன் இணைத்துவிடவும். இதன்மூலம் இபிஎஃப் சேவையை தடையின்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்

மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்

EPFOHO என டைப் செய்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தங்களுக்கான குறுஞ்செய்தி தகவல் கிடைக்கும். இந்த தகவல் இந்தி மொழியில் தேவைப்பட்டால், EPFOHO UAN ஐ எழுத்து மூலம் டைப் செய்து அனுப்ப வேண்டும். இந்த சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது. பிஎஃப் இருப்புக்கு, உங்கள் யுஏஎன் வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்படுவது அவசியம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PF New Rule: Deadline Announced to Link Aadhar Card- How to Link EPF Account with Aadhaar Card

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X