Home
News

பாஸ்புக், க்ளெயிம், செல்லான் தொடர்பாக PF மெம்பர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு.. ஜூலை 1 வரைக்கும் NO!

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, திட்டமிடப்பட்ட கணினி அமைப்பு மாற்ற பணிகள் (சிஸ்டம் மைக்ரேஷன் - System Migration) காரணமாக, ஜூன் 30 ஆம் தேதி வரை தனது உறுப்பினர் இணையதளம், பணியமர்த்துபவர் இணையதளம் மற்றும் உமாங் ஆப் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பிஎப் மெம்பர்களுக்கு வேகமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதே இந்த மேம்படுத்தலின் நோக்கம் என்று இபிஎப்ஓ ​​தெரிவித்துள்ளது. இபிஎப்ஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி: "இக்காலகட்டத்தில், பிஎப் உறுப்பினர்கள் மற்றும் பணியமர்த்துபவர்களால் உறுப்பினர் மற்றும் பணியமர்த்துபவர் இணையதள பக்கங்களில் (interfaces) லாக்-இன் செய்ய முடியாது. இதன் விளைவாக, இந்த தளங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து இணையவழி சேவைகளும் கிடைக்காது."

PF மெம்பர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு.. ஜூலை 1 வரைக்கும் NO!

திட்டமிடப்பட்ட இந்த பராமரிப்பு பணிகளின் போது எந்தெந்த இபிஎப்ஓ ​​சேவைகள் பாதிக்கப்படும்? தரவு மாற்றும் (migration) காலக்கட்டத்தில், இபிஎப்ஓ ​​உறுப்பினர்களால் பின்வரும் சேவைகளை பெற முடியாது என்று இபிஎப்ஓ ​​தெரிவித்துள்ளது:
- இக்காலக்கட்டத்தில் உறுப்பினர்களால் புதிய இபிஎப் கோரிக்கைகளை ((EPF claims) சமர்ப்பிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள கோரிக்கைகளின் செயலாக்க நிலையை அறியவோ முடியாது.

- சிஸ்டம் மேம்படுத்தல் பணிகள் நடைபெறும் போது, ​​பணியமர்த்துபவர்களால் (Employers) எலெக்ட்ரானிக் செல்லான்-கம்-ரிட்டர்ன்-ஐ (Electronic Challan-cum-Return - ECR) சமர்ப்பிக்க இயலாது.
- புதிதாக சேர்ந்த ஊழியர்களுக்கான யுஏஎன் (UAN) இணைப்பு வசதி இக்காலக்கட்டத்தில் கிடைக்காது.
- சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் வரை பிஎப் உறுப்பினர்களால் தங்கள் இ-பாஸ்புக் (e-Passbook) பார்க்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாது.

உமாங் ஆப்பில் என்னென்ன இபிஎப்ஓ ​​சேவைகள் கிடைக்காது? உமாங் என்பது யூனிஃபைடு மொபைல் அப்ளிகேஷன் பார் நியூ-ஏஜ் கவர்னன்ஸ் (Unified Mobile Application for New-age Governance) என்கிற ஒரு அதிகாரப்பூர்வ அரசு தளமாகும். இது பயனர்கள் இபிஎப்ஓ ​​அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் இபிஎப்ஓ ​​சேவைகளை எளிதாக பெற உதவுகிறது.

ஜூன் 30 நள்ளிரவு வரை நடைபெறும் பராமரிப்பு பணிகளின் போது, ​​உமாங் ஆப்பிலும் கூட பல இபிஎப்ஓ சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படலாம். வழக்கமாக பயனர்கள் தங்கள் பிஎப் பேலன்ஸ் தொகையை சரிபார்க்கவும், கோரிக்கைகளை (claims) முன்வைக்கவும், திட்ட சான்றிதழ் அல்லது யுஏஎன்-க்கு விண்ணப்பிக்கவும், யுஏஎன்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவும், கோரிக்கையின் நிலையை அறியவும், நிறுவனங்களை தேடவும், இபிஎப்ஓ ​​அலுவலக முகவரியை பார்க்கவும், குறைகளை பதிவு செய்யவும் மற்றும் ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும் உமாங் ஆப் பயன்படுத்தப்படுகிறது. இவைகளில் சில சேவைகள் தற்காலிகமாக கிடைக்காமல் போகலாம்.

இப்படியாக ஜூன் 30, 2026 அன்று இரவு 11:59 மணி வரை, இணையதளம் மற்றும் உமாங் ஆப் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படும். தடைபட்ட இபிஎப்ஓ ​​சேவைகள் ஜூலை 1, 2026 முதல் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டு கால் (missed call) மூலம் இபிஎப் பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி? நீங்கள் யுஏஎன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்கள் இபிஎப் பேலன்ஸ் விவரங்களை அறியலாம். உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் மற்றும் பான் (PAN) ஆகியவை உங்கள் யுஏஎன் உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஒருவேளை செய்யவில்லை என்றால், இவற்றை இணைக்குமாறு உங்கள் நிறுவனத்திடமும் (employer) நீங்கள் கோரலாம். இந்த சேவைக்கு எவ்வித கட்டணமும் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
PF members attention No Passbook Claim Challan Services in EPFO and UMANG App Till June 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X