Pete Lau கொடுத்த அடேங்கப்பா விளக்கம்.. இதுவே கடைசி.. இனி வரும் OnePlus போன்களில் இது இருக்காது.. என்னது?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், அதன் பிரபலமான அம்சம் ஒன்றிற்கு அதிகாரபூர்வமாக குட்பை கூறியுள்ளது. அது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) ஆகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான பீட் லாவ் (CEO Pete Lau), இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை கொடுத்து உள்ளார்.
அதில் இந்த புதிய மாற்றம் குறித்து பேசி உள்ளார்; ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அலெர்ட் ஸ்லைடரை கைவிடுவதற்கான காரணம் என்ன (Why OnePlus Killing Alert Slider) என்பதை பற்றியும், மேலும் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றியும் பேசி உள்ளார்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை ஸ்லைடரை நீக்குவதை தவிர வேறு விருப்பங்கள் இல்லை என்று லாவ் கூறி உள்ளார். ஏனென்றால் ஏற்கனவே உள்ள அலெர்ட் ஸ்லைடர் பட்டனை கஸ்டமைஸ் செய்ய முடியாது. அலர்ட் ஸ்லைடர் ஒரு ஹார்ட்வேர் சுவிட்ச் ஆகும். இதன் செயல்பாடு அதன் பிஸிக்கல் நிலைக்கு லாக் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அலெர்ட் ஸ்லைடர் பட்டனின் எளிமையை இழக்காமல் அதை ரீப்ரோக்ராம் செய்யவோ அல்லது விரிவாக்கவோ முடியாது. எனவே தான் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அலெர்ட் ஸ்லைடர் நீக்கப்படுவதற்கான மற்றும் அதற்கு பதிலாக புதிய பட்டன் சேர்க்கப்படுவதற்கான தேவை உருவாகியுள்ளது என்று பீட் லாவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதோடு சேர்த்து ஏஐ-யின் வருகை மற்றும் நிறுவனங்கள் அனைத்து சக்தியுடனும் கூடிய ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்.. ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஆக்ஷனபிள் பட்டனிற்கு மாறுகிறது என்றும், இந்த மாற்றங்கள் அல்லது மேம்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பீட் லாவ் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் அறிமுகம் தொடர்பான யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இருந்தது. 2025 ஆம் ஆண்டில் எந்தவிதமான போல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது எதிர்பார்த்த அளவிற்கு மட்டுமின்றி.. ஓரளவிற்கு கூட வெற்றி பெறவில்லை.
கஸ்டமர்கள் கொடுத்த "அந்த அடியால்" ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அப்கிரேட்ட வெர்ஷனை.. அதாவது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவே இல்லை; அது குறித்து வாய் கூட திறக்கவில்லை. இதற்கிடையில் தான் ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 மடலுக்கும் சம்பந்தம் இல்லை; 2025 இல் போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐடியாவே இல்லை என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஸ்மார்ட்போன் ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 48-மெகாபிக்சல் மெயின் கேமரா + 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. இன்னர் டிஸ்பிளேவில் 20-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது
கடைசியாக ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும். விலையை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 என்கிற அறிமுக விலையில் வெளியானது. தற்போது ரூ.1,49,999 க்கு எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








