இது அலாரம் வைத்தவரை மட்டும் எழுப்பும்..!
அலாரம் சிலருக்கு வரம், பலருக்கு சாபம். யார் அந்த சிலர் என்று பார்த்தால் அலாரம் வைத்தவர்கள், யார் அந்த பலர் என்று பார்த்தால் அலாரம் வைத்தவர்களின் அருகில் தூங்குபவர்கள்.
யார் வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் - உஷார் !
யாரும் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை என்றாலும்கூட, இந்த அலாரம் மட்டும் விதிவிலக்கு. பாரபட்சமே பார்க்காது அத்தனை பேரையும் எழுப்பிவிட்டு விடும். சரி, மற்ற யாரையும் தொந்தரவு செய்யாமல் அலாரம் வைத்தவர்களை மட்டும் ஒரு கருவி எழுப்பினால் எப்படி இருக்கும். அப்படியான ஒன்றைத்தான் நாம் இங்கே காணவிருக்கிறோம்.

வேக்
இந்த புதுமையான அலாரக் கருவியின் பெயர் - வேக்.

அலாரம் வைத்தவர்களை மட்டும் எழுப்பும்.
குறிப்பிட்ட பிரகாசமான ஒளியையும், சத்தத்தையும் பயன்படுத்தி அலாரம் வைத்தவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் இது எழுப்பும்.

பர்சனல் சன்ரைஸ்
உறங்குபவர்களின் தலைக்குமேல் சுவற்றில் மாட்டிக்கொள்ளும்படி, அமைக்கப்பட்ட இது ஒவ்வொருவரின் பர்சனல் சன்ரைஸ்-சையும் உருவாக்கும்.

அல்ட்ராசோனிக் அலைகள்
இது அல்ட்ராசோனிக் அலைகளை பயன்படுத்தி குறிப்பிட நபரை பின் தொடர்ந்து, ஏனையோரை தொந்தரவு செய்யாமல் அவரை மட்டும் எழுப்பும்.

பின் தொடரும்
இதன் அல்ட்ரா சோனிக் அலைகள் அலாரம் வைத்தவரிகளின்ன், செட் செய்யப்பட்ட உடல் வெப்பத்தை வைத்து உருண்டாலும் புரண்டாலும் பின் தொடரும்.

ரீசார்ஜாபில் பேட்டரி
ரீசார்ஜாபில் பேட்டரி மூலம் இந்த கருவி இயங்கும்.

ஸ்மார்ட் போன் அப்பிளிக்கேஷன்
படுக்கையில் எந்த பக்கம் படுப்போம், எப்போது எழ விரும்புகிறோம் என்பதை ஸ்மார்ட் போன் அப்பிளிக்கேஷன் மூலம் செட் செய்தால் போதும்.

அலார டோன்
மற்றபடி இதன் அலார சத்தமாக ரிங்டோன், பிடித்த பாடல்கள் என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications