Home
News

கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்.!

அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

 தினசரி ஏதாவது ஒரு

அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த அமேசான் நிறுவனம்.

மேசான் வலைத்தளத்தில் கோல்கேட்

இந்நிலையில் அமேசான் வலைத்தளத்தில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பை நபருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ல்கேட் மவுத்வாஷ் பாட்டில்கள் ஆர்டர் செய்ததாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்வை தனது ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட லோகேஷ் தாகா என்ற அந்த நபர், அமேசான் நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார். அந்த ட்விட்டரில் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன் ஷாட்டில் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் பாட்டில்கள் ஆர்டர் செய்ததாகதெரிகிறது.

ரூ.369 கட்டணம்

குறிப்பாக அந்த பார்சலுக்கு ரூ.369 கட்டணம் செலுத்தியதாக பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்பு அந்த ஆர்டரை மே 10-ம் தேதி அன்று அமேசானில் பிளேஸ் செய்ததாக அந்த மும்பை நபர் லோகேஷ் தாகா கூறியுள்ளார். ஆனால் அந்த பார்சலை திறந்து பார்த்த போது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததைக் கண்டு ஷாக் ஆகியுள்ளார்.

மேலும் இந்த ஆர்டரை ரிட்டன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் ஆப்ஷன் தடைசெய்யப்பட்டுள்ளது. பின்பு ஆப் வழியே தன்னால் ரிட்டர்ன் செய்ய முடியவில்லை என்று பதிவிட்டிருந்தார் லோகேஷ் தாகா.

திலாக பெட்டியில் ஸ்மார்ட்போன்

ஆர்டர் செய்யப்பட்ட பார்சலில் ரூ.13000 மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை இருந்ததைக்கண்டு திகைத்துப்போன வாடிக்கையாளர் அந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். பின்பு அவர் அமேசான் தளத்தில் பெற விரும்பியது மவுத்வாஷ் மட்டுமே, ஆனால் அதற்கு பதிலாக பெட்டியில் ஸ்மார்ட்போன் கிடைதுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
person who ordered the Colgate Mouthwash got the Redmi Note 10 smartphone!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X