இத பண்ணாதிங்க., தொடர்ந்தால் விளைவு கடுமையா இருக்கும்: மைக்ரோசாப்ட் சிஇஓ அளித்த எச்சரிக்கை!

|

அமெரிக்க ஊடகம் ஒன்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது

குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது

கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம்

இந்தியாவில் கொரோனா தாக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 611 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாவும், அதில் 140 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இதுவரை 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!

உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்கு முறையான மருந்து கண்டுபடிக்காத காரணத்தால் வைரஸை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இதை தடுப்பதன் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

அதேபோல் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

டுவிட்டர் அனுப்பிய மின்னஞ்சல்

டுவிட்டர் அனுப்பிய மின்னஞ்சல்

இதில் டுவிட்டர் ஒருபடி மேலே சென்று, கொரோனாவுக்கு பிறகும், ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என சமூக ஊடகமானடிவிட்டர் நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாத துவகத்தில் இருந்து,தங்களது 5,000ஊழியர்களை, கொரோனா அலை ஓயும் வரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய டிவிட்டர் நிறுவனம் அனுமதியளித்தது.

டுவிட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவல்

டுவிட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவல்

டுவிட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் ஏற்பாடு,சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை,கடந்த சில மாதங்களில் நாம் நிரூபித்துள்ளோம் இந்த கொரோனாவுக்கு பிறகும் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு,அவர்களின் வேலையும், சூழ்நிலையும் அனுமதி அளித்தால் அதை நாம் செய்துகொடுப்போம் என ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்கள்

ஃபேஸ்புக், கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்கள்

இந்த நிலையில் கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறது.

தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா

தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா

அமெரிக்க ஊடகம் ஒன்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ஊழியர்களின் வொர்க் ஃப்ரம் ஹோம் தேர்வினை நிரந்தரமாக்கினால் ஊழியர்களின் மனநிலை பாதிக்கப்படும் எனவும் அலுவலகங்களில் பிறருடன் பழகுவது, சமத்துவம், ஒற்றுமையாக இணைந்து சேர்ந்து பணியாற்றுவது போன்ற சமூகத் தொடர்பு விஷயங்களில் இருந்து விலகி இருக்க நேரிட்டு பெரும் சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

108எம்பி கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!108எம்பி கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

வரும் காலங்களில் கடும் பிரச்சனை சந்திக்க வாய்ப்பு

வரும் காலங்களில் கடும் பிரச்சனை சந்திக்க வாய்ப்பு

அனைவரும் நேரில் சந்தித்து கருத்துகளை பரிமாறும் மீட்டிங் ஆதரவை வீடியோ கால் மீட்டிங் கொடுக்காது எனவும் இது வரும் காலங்களில் கடும் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் சிஇஓ கருத்துப்படி அலுவலகம் சென்று வேலை பார்க்கும் அனுபவத்தை வொர்க் ஃப்ரம் ஹோம் முறை கொடுக்காது என தெரிவித்துள்ளார்.

source: livemint.com

Best Mobiles in India

English summary
permanently working from home can be damaging mental health says microsoft satya nadella

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X