பார்வையற்றோருக்கான புதிய டிஜிட்டல் பிரெய்லி சாதனம்!

Posted By: Karthikeyan
பார்வையற்றோருக்கான புதிய டிஜிட்டல் பிரெய்லி சாதனம்!

கண் பார்வையற்றவர்கள் எழுதப் படிக்க ப்ரெய்லி என்ற எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி படிக்கின்றனர். அவர்களுக்கான எழுத்துக்கள் தடிமனான தாள்களில் சிறு சிறு துளைகள் போடப்பட்டு ஒரு புதிய வடிவத்தில் இருக்கும். இந்த துளைகளை தங்களது விரல்களால் தடவிக் கொண்டே அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள்.

இந்த பிரெய்லி முறைக்கு பிடிடி மற்றும் பெர்கின்ஸ் நிறுவனம் ஒரு புதிய டிஜிட்டல் வடிவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை தயாரித்திருக்கிறது. இந்த சாதனத்திற்கு பெர்க்கின்ஸ் ஸ்மார்ட் ப்ரைலர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த ப்ரைலரில் ஏற்கனவே எல்லாவித பாடங்களும் அப்லோடு செய்யப்பட்டிருக்கும். இந்த ப்ரைலரை இயக்கும் போது அது பாடங்களை ஒலிக்கும். எனவே கண் தெரியாதவர் இந்த ப்ரைலரை இயக்கி பாடங்களைக் கேட்டுக் கொண்டு படிக்கலாம்.

மேலும் இதில் யுஎஸ்பி வசதி உள்ளதால் இதன் மூலம் பிரிண்டரில் இணைப்பு கொடுத்து டிஜிட்டல் ப்ரைலரில் இருக்கும் பாடங்களை பழைய காகித ப்ரைலர் போன்று பிரண்டவுட் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த புதிய டிஜிட்டல் ப்ரைலர் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. இது 1995 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot