இது கட்டாயம்., பெண்களுக்கு இனி இந்த கவலையே வேணாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய சாட்போட்!

|

சிரோனா பெண்களுக்கான புதிய வாட்ஸ்அப் சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. சிரோனா சாட்போட் ஆனது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க உதவும். இந்த சாட்போட் பெண்களுக்கு பலவகையில் பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பீரியட் டிராக்கர் அம்சம்

பீரியட் டிராக்கர் அம்சம்

இந்தியாவின் பெண்களுக்கான சுகாதார பிராண்டாக சிரோனா திகழ்ந்து வருகிறது. இந்த பிராண்ட் வாட்ஸ்அப்பில் முதல் பீரியட் டிராக்கர் பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களை கண்காணிக்க இது உதவும். வாட்ஸ்அப் சாட்போட் அடிப்படையிலான பீரியட் டிராக்கர் ஆனது மாதவிடாய் காலங்களில் அறிவிப்பை ஏற்படுத்தி அவர்களை கண்காணிக்க உதவும். எப்படி இந்த சாட்போடை இயக்கி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

சாட்போட்டில் எப்படி இணைவது தெரியுமா?

சாட்போட்டில் எப்படி இணைவது தெரியுமா?

"9718866644" என்ற சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த மெசேஜ் அனுப்பப்படுவதன் மூலம் ஒருவர் வாட்ஸ்அப் சாட்போட்டை தொடங்கலாம். மாதவிடாய் டிராக், கருத்தரித்தல் அறிதல் மற்றும் கர்ப்பத்தை தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளை கண்காணிக்க பீரியட் டிராக்கரை பயன்படுத்தலாம் என பிராண்ட் குறிப்பிட்டுள்ளது.

மாதவிடாய் கால அறிவிப்பு உள்ளிட்ட பல பயன்கள்

மாதவிடாய் கால அறிவிப்பு உள்ளிட்ட பல பயன்கள்

அதாவது மாதவிடாய் கால அறிவிப்பு, கருத்தரித்திருக்கோம் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த சாட்போட் பயன்படும். கரப்பத்தை தவிர்ப்பதற்கும் இந்த சாட்போட் உதவியாக இருக்கும். இதன்மூலம் கருக்கலைப்புகளை தவிர்க்கலாம். குறிப்பிட்ட தகவலை பதிவிடுவது அவசியம்.

இந்த தகவலை உள்ளிடுவது மிக அவசியம்

இந்த தகவலை உள்ளிடுவது மிக அவசியம்

இந்த பயன்பாட்டைத் தொடங்குவதற்கு பயனர் முதலில் அவர்களின் மாதவிடாய் சுழற்சி காலம் மற்றும் கடைசி மாதவிடாய் காலம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த தகவலை சாட்போட் சேமித்து வைத்திருக்கும். இதன் அடிப்படையில் பயனர்களுக்கு தேவையான நினைவூட்டல்கள் மற்றும் வரவரிக்கும் சுழற்சி தேதிகளை நினைவுப்படுத்தும்.

பீரியட் டிராக்கரில் பிரத்யேக அம்சம்

பீரியட் டிராக்கரில் பிரத்யேக அம்சம்

வாட்ஸ்அப் பிஸ்னஸ் பிளாட்ஃபார்மில் இந்த சாட்போட் ஆனது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பயனர்களை ஈர்க்கும் வகையில் மென்மையான அனுபவத்தை வழங்க சிரோனா பீரியட் டிராக்கர் ஆனது super-intuitive (சூப்பர் உள்ளுணர்வு) ஆதரவோடு உருவாக்கப்பட்டிருப்பதாக சிரோனா குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சி

சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சி

மேலும் அனைத்து மாதவிடாயாளர்களுக்கும் தேவைப்படும் மாதவிடாய் கண்காணிப்பு, மாதவிடாய் ஆரோக்கியம் உள்ளிட்ட முக்கிய சேவையை வழங்குவதே நோக்கமாகும் எனவும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வகையில் சேவையை வழங்கப்படுகிறது எனவும் சிரோனா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு அம்சம்

பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு அம்சம்

வாட்ஸ்அப் தளத்தில் சமீப காலமாக பயனர்களுக்கு தேவையான பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சற்று இடைவெளி கொடுங்கள் என்று பயனர்களே கேட்கும் அளவிற்கு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. ஐஓஎஸ் வெர்ஷனுக்கு வெளியான ஒரு வருடத்துக்கு பிறகு வாட்ஸ்அப் டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யும் அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு வெளியாகி இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும்படியான "க்ரூம் மெம்பர்ஷிப் அப்ரூவல்" என்கிற அம்சம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

512 உறுப்பினர்கள் வரை குழுவில் இணையலாம்

512 உறுப்பினர்கள் வரை குழுவில் இணையலாம்

வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது 512 உறுப்பினர்கள் வரை வாட்ஸ்அப் குழுவில் இணைக்க அனுமதிக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் பயன்பாட்டில் 100 எம்பி வரையிலான கோப்புகள் மட்டுமே பகிர முடியும் என்று இருந்த நிலையில் வாட்ஸ்அப் அதை 2ஜிபி ஆக உயர்த்தியது. இதன்மூலம் பயனர்கள் 2 ஜிபி வரையிலான கோப்புகளை வாட்ஸ்அப்பில் பகிர முடியும்.

'Undo' என்ற பட்டன்

'Undo' என்ற பட்டன்

WABetaInfo அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படாத எண்களுக்கு கூட மெசேஜ்களை அனுப்பும் புதிய அம்சத்தில் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை நமது ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படாத எண்களுக்கு மெசேஜ்களை அனுப்ப WhatsApp அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் WhatsApp அதன் பயனர்களுக்கு 'Undo' என்ற பட்டனைக் கொண்டு வரக்கூடும் என WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. இதன்மூலம் பயனர்கள் தவறுதலாக டெலிட் செய்யும் மெசேஜை மீட்டெடுக்க முடியும்.

பிரத்யேக எடிட் பட்டன் விரைவில்

பிரத்யேக எடிட் பட்டன் விரைவில்

வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் என்று ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம்.

Best Mobiles in India

English summary
Period Tracking: Sirona Launched New Whatsapp Chatbot For Women

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X