ரூ.16.8 கோடிக்கு 20000 சென்ட் பாட்டில்கள் விற்ற Elon Musk! பிளானை கேட்டா தலையே சுத்துது..

|

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

புதிய அவதாரம் எடுத்த எலான் மஸ்க்

புதிய அவதாரம் எடுத்த எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இதற்கான தீவிர முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

கால் பதிக்கும் இடமெல்லாம் வெற்றிக் கொடியை நாட்டி இயல்பாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வார் எலான் மஸ்க்.

சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின் பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மஸ்க் புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

சேல்ஸ் மேன் ஆக மாறிய எலான் மஸ்க்

சேல்ஸ் மேன் ஆக மாறிய எலான் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் பிரதான இடம் பிடித்திருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் தனது ட்விட்டர் பயோவை "perfume salesman" என மாற்றினார்.

மஸ்க் திடீரென பயோவை இப்படி மாற்ற காரணம் என்ன என்று சமூகவலைதள வாசிகள் புலம்பித் தவித்தனர். ஆனால் மஸ்க் தற்போது உண்மையாக சென்ட் பாட்டில் சேல்ஸ் மேன் ஆக மாறி இருக்கிறார். ஆம், தற்போது மஸ்க் வாசனை திரவிய தொழிலில் நுழைந்திருக்கிறார்.

தலைசுத்த வைக்கும் திட்டமும் விற்பனையும்

தலைசுத்த வைக்கும் திட்டமும் விற்பனையும்

தொடர்ந்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் "தயவுசெய்து எனது வாசனை திரவியத்தை வாங்கவும், அப்போது தான் என்னால் ட்விட்டரை வாங்க முடியும்" என்று நகைச்சுவையாக ட்விட் செய்தார்.

எலான் மஸ்க் பர்ன்ட் ஹேர் என்ற பெர்ஃப்யூமை அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கி உள்ளார். எலான் மஸ்க்கின் இந்த பர்ன்ட் ஹேர் பெர்ஃப்யூமிற்கு பெரிய அளவு விளம்பரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. வெறும் மக்ஸ் ட்வீட் மட்டுமே விளம்பரமாகும்.

ஆனால் இதன் விற்பனை தலைசுத்த வைக்கும் வகையில் இருக்கிறது.

சென்ட் விற்றே ட்விட்டரை வாங்கிவிடுவாரோ?

சென்ட் விற்றே ட்விட்டரை வாங்கிவிடுவாரோ?

"பர்ன்ட் ஹேர்" என்று அழைக்கப்படும் புதிய வாசனை திரவியம் அறிமுகமான சில மணிநேரங்களில் 20,000 பாட்டில்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் ஒரு பாட்டிலின் விலை ரூ.8,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே 20,000 பாட்டில்கள் ரூ.16.8 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே போனால் மஸ்க் சென்ட் விற்றே ட்விட்டரை வாங்கிவிடுவார் போல் இருக்கிறது.

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்

அக்டோபர் இறுதிக்குள் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அவர் இதை செய்ய தவறும் பட்சத்தில், நவம்பரில் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மீறிய வழக்கு விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இது முதன்முறையல்ல..

இது முதன்முறையல்ல..

எலான் மஸ்க் பெர்ப்யூம் பாட்டில்களை தி போரிங் நிறுவனம் மூலமாக விற்பனை செய்கிறார். மஸ்க் இப்படி செய்வது முதன்முறை அல்ல, முன்னதாக மஸ்க், போரிங் நிறுவனத்தின் மூலம் தொப்பிகளையும், நெருப்புகள் கக்கும் துப்பாக்கிகளையும் விற்பனை செய்தார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இதை அப்பவே செய்திருக்கலாம்

இதை அப்பவே செய்திருக்கலாம்

பர்ன்ட் ஹேர் என்ற வாசனை திரவியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

"என்னைப் போன்ற பெயருடைய ஒருவர் வாசனைத் தொழிலில் இறங்குவது என்பது தவிர்க்க முடியாதது- நான் ஏன் இவ்வளவு நேரம் போராடினேன்!" என நகைச்சுவையாக மஸ்க் மீண்டும் ட்வீட் செய்தார்.

மஸ்க் இருப்படி குறிப்பிடக் காரணம், மஸ்க் என்பதன் பொதுவான பொருள் ஒரு வலுவான மணம் கொண்ட சிவப்பு-பழுப்பு நிறப் பொருள், வாசனை திரவியத்தில் ஒரு முக்கிய மூலப்பொருள் என்பதாகும்.

அது என்ன பர்ன்ட் ஹேர் பெர்ப்யூம்?

இந்த பெர்ப்யூம் குறித்து பார்க்கையில், அழகான சிவப்பு நிறப் பாட்டிலில் இது பேக் செய்யப்பட்டிருக்கிறது.

"தி எசன்ஸ் ஆஃப் ரிப்யூக்னன்ட் டிசையர்" என்ற டேக்லைன் அதில் உள்ளது. பர்ன்ட் ஹேர் என்ற பெயருடன் இந்த பெர்ப்யூம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தயாரிப்பு இணைப்பு கொண்ட அசல் ட்வீட்டை மேற்கோள் காட்டி எலான் மஸ்க், Dogecoin மூலமாகவும் பெர்ப்யூம் பாட்டில்களை வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.

Shop.boringcompany.com என்ற தளத்தின் மூலம் இந்த பெர்ப்யூம் பாட்டில்களை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Perfume Salesman Plans: Elon Musk sold 20000 Burnt Hair Perfume bottles for Rs 16.8 crore

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X