Home
News

இந்த 'பாவத்தில்' சினிமாவிற்கும் பங்கு உண்டு..!

ஸ்கூல் படிக்கிற பையன் முதற்க்கொண்டு "ஹே... ரொம்ப பேசாத.. அப்புறம் உன்னோட ஃபேஸ்புக்கை ஹேக் பண்ணிடுவேன்"னு மிரட்டுறான். அந்த அளவிற்கு 'ஹேக்கிங்' என்பது 'ஹீரோயிச' செயல் போன்றதொரு பிரமை இங்கு நிலவுகிறது என்பது தான் நிதர்சனம்.

அதாவது, ஹேக் செய்வது என்பது ஒரு பெரிய சாதனை, அதிதிறமைசாலிகள் தான் ஹேக்கர்களாக முடியும், ஹேக்கர் என்றால் ஒரு தனி மரியாதை கிடைக்கும், 'கெத்து' இருக்கும் என்றெல்லாம் நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் முதலில் வந்து நிற்பது - திரைப்படங்கள் தான்..!

ஏனெனில், தானாக சிகரெட் புகைக்க ஆரம்பித்தவர்களை விட.. சினிமா பார்த்து புகைக்கும் கூட்டம் தான் இங்கு அதிகம். அந்த அளவிற்கு சினிமா நம்மை ஆள்கிறது.

டாப் 10 ஹேக்கிங் :

டாப் 10 ஹேக்கிங் :

அப்படியாக, ஹேக்கிங் என்பதை மிகவும் பிரபலப்படுத்திய, ஹேக்கிங்கை கற்றுக்கொள்ள தூண்டும் டாப் 10 ஹேக்கிங் சார்ந்த திரைப்படங்களை தான் பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

10. சைபர்கெடான் (Cybergeddon) :

10. சைபர்கெடான் (Cybergeddon) :

கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து வங்கிகளில் இருந்து பணம் திருடுவது தான் இத்திரைப்படத்தின் கதைக்களம்.

டிவி சீரியல் :

டிவி சீரியல் :

இது ஒரு டிவி சீரியலாக எடுக்கப்பட்டு பின் திரைப்படமாக உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

09. டிரான்ஸ்ஃபார்ம்மர்ஸ் தொகுப்பு (Transformers Series) :

09. டிரான்ஸ்ஃபார்ம்மர்ஸ் தொகுப்பு (Transformers Series) :

சிறந்த அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்றான இதில் கம்ப்யூட்டர்களும், ராணுவ செயற்கைகோள்களும் நொடியில் 'ஹேக்' செய்யப்படும்.

பாகங்கள் :

பாகங்கள் :

இதுவரை மொத்தம் 4 பாகங்கள் வெளியாகி உள்ளன என்பதும், ஐந்தாவது பாகம் 2017-ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

08. அண்டர்க்ரவுண்ட்(Underground) :

08. அண்டர்க்ரவுண்ட்(Underground) :

வீக்கிலீக்ஸ் என்ற வலைதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸெஞ்ச் (Julian Assange) பற்றிய கதைக்களம் கொண்ட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை :

சர்ச்சை :

அரசாங்க பதிவுகளை பகிர்ந்து கொண்ட மிகவும் சர்ச்சைக்குறிய வலைதளம் தான் - வீக்கிலீக்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. ஈகில் ஐ (Eagle Eye) :

07. ஈகில் ஐ (Eagle Eye) :

அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பின் மூலம், சொல்வதை செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்ற விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டது இந்த திரைப்படம்.

சூப்பர் கம்ப்யூட்டர்கள் :

சூப்பர் கம்ப்யூட்டர்கள் :

இதில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு அனைத்து வகையான ராணுவ தொடர்புகளும் தடுத்து நிறுத்தப்படும் காட்சி அமைப்பும் உண்டு.

06. ஐயர்ன் மேன் 3 (Iron Man 3) :

06. ஐயர்ன் மேன் 3 (Iron Man 3) :

ஐயர்ன் மேன் ஒரு அறிவியல் கற்பனை கதை என்பது குறிப்பிடத்தக்கது.

வகை :

வகை :

இருப்பினும் அமெரிக்க அதிபரின் தொலைப்பேசி தொடங்கி நேரடி ஒலிபரப்பு டிவி வரை அனைத்து வகையான ஹேக்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.

05. பிளாக்ஹாட் (Blackhat) :

05. பிளாக்ஹாட் (Blackhat) :

இந்த திரைப்படம் அணு உலைகளை 'ஹேக்' செய்து, அணு ஆயுத வெடிப்பு சம்பவங்களை நடத்துவது போன்ற கதைக்களத்தை கொண்டது.

ஷேர் மார்க்கெட் :

ஷேர் மார்க்கெட் :

இந்த திரைப்படத்தில் ஷேர் மார்க்கெட்டுகள் ஹேக் செய்யப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்படும் காட்சி அமைப்பும் உண்டு.

04. அன்ட்ரேசபில் (Untraceable) :

04. அன்ட்ரேசபில் (Untraceable) :

இந்த திரைப்படத்தில் ஹேக்கர்கள் வலைதளம் ஒன்றை உருவாக்கி அதில் மக்களை கொன்று நேரடியாக ஒளிப்பரப்புவார்கள்.

வலைதளம் :

வலைதளம் :

அதை காண லட்சக்கணக்கான மக்கள் அந்த வலைதளத்தை தொடர்வார்கள் அதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தவே முடியாது போன்ற விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டது இந்த திரைப்படம்.

03. லிவ் ஃப்ரீ ஆர் டை ஹார்ட் (Live free or die hard) :

03. லிவ் ஃப்ரீ ஆர் டை ஹார்ட் (Live free or die hard) :

ஹேக்கிங் என்பது நிகழ் உலகை எவ்வாறு பாதிக்கும் என்பதை அப்பட்டமாக சொன்ன கதை இது.

02. டேக்டவுன் (TakeDown) :

02. டேக்டவுன் (TakeDown) :

புகழ் பெற்ற கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆன கெவின் டேவிட் மிட்னிக் பற்றிய கதை இது.

01. தி மேட்ரிக்ஸ் (The Matrix) :

01. தி மேட்ரிக்ஸ் (The Matrix) :

கம்ப்யூட்டர் ஹேக்கரான கதா நாயகன், சூப்பர் ஹூமன் ஆகி மெஷின்களிடம் இருந்து உலக மக்களை காப்பாற்றுவது போன்ற விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டது இந்த திரைப்படம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
People learn hacking by using movies also. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X