யானைக்காக மேனகா காந்தியின் PFA வலைத்தளத்தை ஹேக் செய்த கேரள ஹேக்கர்கள்! ஏன் தெரியுமா?

|

பாஜக எம்.பி. மேனகா காந்தி நிதியளித்த விலங்கு உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வலைத்தளம் கேரள மாநிலத்தில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யானை மரணம் குறித்து போலியான அரசியல் செய்வதாக மேனகா காந்தியைக் கண்டித்து ஹேக்கர்கள் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் வலைத்தளத்தை ஹேக் செய்து அதில் அவர்களுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளனர்.

மேனகா காந்தி தலைமையிலான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்

மேனகா காந்தி தலைமையிலான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்

பாஜக எம்.பி. மேனகா காந்தி தலைமையில் நிறுவிய விலங்கு உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (PFA) அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் 'கேரள சைபர் வாரியர்ஸ்' என்ற பேஸ்புக் ஹேக்கர் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது "இனவாத வெறுப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை" ஹேக்கர்கள் தங்கள் கண்டனத்தை வலைப்பக்கத்தின் முகப்பில் பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணி யானை இறந்த சம்பவம்

கர்ப்பிணி யானை இறந்த சம்பவம்

கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை இறந்ததைத் தொடர்ந்து, அம்பலப்பராவின் லொகேஷனை கூகிள் வரைபடத்துடன் ஹேக்கர்கள் பதிவிட்டதுடன், ஹேக்கர்களின் நீண்ட செய்தியையும், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் வலைத்தளம் இப்போது காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைனில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

கீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா?கீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா?

இது தான் தவறு என்று கொந்தளித்த ஹேக்கர்கள்

இது தான் தவறு என்று கொந்தளித்த ஹேக்கர்கள்

கர்ப்பிணி யானை இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் முஸ்லிம் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான மலப்புரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக ட்வீட் செய்துள்ளனர். யானைகள் கொல்லப்பட்ட பகுதி பெரும்பாலான முஸ்லிம்கள் சூழ்ந்த பகுதி என்று ட்வீட் செய்திருப்பதை ஹேக்கர்கள் கண்டித்துள்ளனர்.

போலி அரசியல் செய்யாதீர்கள் என்று கண்டித்த ஹேக்கர்கள் குழு

போலி அரசியல் செய்யாதீர்கள் என்று கண்டித்த ஹேக்கர்கள் குழு

முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலர், இந்த சம்பவத்தை இனவாத வெறுப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை, அரை உண்மைகளையும் தெளிவான பொய்களையும் கோர்த்து, போலியான கதைகளை உருவாகுவதற்கான முயற்சிகளை அவர் கண்டித்தனர். பி.எஃப்.ஏ பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் "கர்ப்பிணி யானையின் சோகமான மரணத்தை மேனகா காந்தி போலி அரசியலுக்காகப் பயன்படுத்தப் பார்க்கிறார்."என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

PFA பக்கத்தில் குறிப்பிட்டிருந்த முழு தகவல் இது தான்

PFA பக்கத்தில் குறிப்பிட்டிருந்த முழு தகவல் இது தான்

"உங்கள் செயல்பாடு, விலங்கு மீதான அன்பையும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு தவறான தகவல்களைப் பரப்புவது தேசத்திற்கு உண்மையான அச்சுறுத்தலாகும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மலப்புரத்தில் இந்துக்கும் முஸ்லிமுக்கும் இடையிலான பிணைப்பு வலுவானது. " எங்களை எளிதாக நினைத்துவிடாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
People For Animals Website Hacked By Kerala Cyber Warriors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X