Home
News

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

இதுவரை நாம் வேற்று கிரகங்கள் பற்றியும், வேற்று கிரகங்களில் நிகழும் பல விசித்திரமான விஷயங்களைப் பற்றியும் படித்திருக்கிறோம். இன்னும் வியப்பின் ஒரு படி மேலே சென்றால், சில நேரங்களில் வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவலையும் நாம் படித்திருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் வேற்று கிரக வாசிகள் அல்லது ஏலியன்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று உதாசீனப்படுத்தியிருப்போம். ஆனால், பூமி வாசிகள் இன்று வரை தொடர்ந்து UFO மற்றும் ஏலியன் போன்ற உருவங்களை நேரில் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு வேற்று கிரக வாசிகளுடன் நேரடி அனுபவம் இருக்கிறதா?

மனிதர்களுக்கு வேற்று கிரக வாசிகளுடன் நேரடி அனுபவம் இருக்கிறதா?

சிலருக்கு வேற்று கிரக வாசிகளுடன் நேரடி அனுபவம் கூட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மனிதர்கள் ஏலியன்களை சந்தித்துள்ளனரா? இவையெல்லாம் உண்மை தானா? என்று நமது வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்த்தால், பூமியில் பல இடங்களில் UFO - அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற விமானம் மற்றும் ஏலியன் போன்ற உருவங்களை மக்கள் கண்டதாகப் பல நம்ப முடியாத தகவல்கள் ஆங்காங்கே கிடைத்துள்ளன. இருப்பினும், நம்பகமான ஆதாரம் என்று எதுவுமே இன்று வரை கிடைக்காமல் இருந்தது.

இன்னும் மர்மமாக இருக்கும் அமெரிக்காவின் 'ஏரியா 51' தளம்

இன்னும் மர்மமாக இருக்கும் அமெரிக்காவின் 'ஏரியா 51' தளம்

அமெரிக்காவில் உள்ள ஏரியா 51 என்ற பகுதி வேற்று கிரக வாசிகளின் கூடாரமா என்ற அளவிற்குப் பல சர்ச்சைகளை உருவாக்கியது. பூமி வாசிகளுக்குத் தெரியாமல், ஏலியன் ஆராய்ச்சி மற்றும் பல மர்மங்கள் இந்த ஏரியா 51 தளத்தில் பாதுகாக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்படும் ஒரு ரகசிய மறைவிடமாக இருப்பதாகக் கருதப்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னாள், அமெரிக்க விமான படை அடையாளம் தெரியாத மர்ம பறக்கும் பொருட்களை வானிலும், கடலுக்கு நடுவேயும் கண்டதாக வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு உண்மையை ஒப்புக்கொண்டது. ஆனால், இவை என்னவென்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் மழுப்பியது.

பென்டகனின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த வெளியான ரகசியத் தகவல்

பென்டகனின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த வெளியான ரகசியத் தகவல்

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இப்போது வரை நாம் ஏலியன்கள் பற்றி யூகித்துக் கூட பார்க்க முடியாத ஒரு செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு பெட்டகத்தில் ரகசியமாக வைத்திருக்கப்பட்ட ஒரு ரகசிய கோப்பிலிருந்து இந்த உண்மை தகவல் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஏலியன் பற்றி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள பென்டகனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பென்டகன் ஏன் அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு இடம் தெரியுமா?

பென்டகன் ஏன் அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு இடம் தெரியுமா?

பென்டகன் என்பது, வாஷிங்டன், டி.சி.க்கு அருகிலுள்ள ஆர்லிங்டன் கவுண்டி, வர்ஜீனியாவில் உள்ள பெரிய ஐந்து பக்க கட்டிடம் ஆகும். இது அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று இராணுவ சேவைகளையும் உள்ளடக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமாகச் செயல்படுகிறது.அமெரிக்காவின் முற்படைகள் மூலம் சேகரிக்கப்பட்ட பல முக்கியமான ரகசியங்கள் இங்கு தான் பாதுகாக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்து வெளியான ஒரு தகவல் நிச்சயம் உண்மையாக இருக்கும் என்பது தான் பலரின் கருத்தாக இருக்கிறது.

உண்மையில், ஏலியன்கள் பூமிக்கு வந்துள்ளதா?

உண்மையில், ஏலியன்கள் பூமிக்கு வந்துள்ளதா?

ஏலியன் என்ற வார்த்தையைக் கேட்டதும், மனதில் பல ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் நீண்ட கைகள் மற்றும் கால்கள் கொண்ட, நெளிந்த மண்டை ஓட்டை உடைய ஒரு உருவம் நம் கண்களில் வந்து மறைந்திருக்கும். இந்த உருவத்தை நம் மனதில் பதிய வைத்தது யார்? உண்மையில் ஏலியன்கள் இப்படி தான் இருக்கும் என்று நம்மை நம்ப வைத்தது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், பல சதிக்கோட்பாளர்கள், ஏலியன்கள் நமது கிரகத்தைப் பல யுகங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர்.

சதிக்கோட்பாளர்களையே கதிகலங்க வைத்த பென்டகன் தகவல்

சதிக்கோட்பாளர்களையே கதிகலங்க வைத்த பென்டகன் தகவல்

ஏலியன்கள் பற்றிப் பல விஷயங்களைப் பரப்பும் சதிக்கோட்பாளர்களுக்கு கூட இப்போது வெளியான தகவலைக் கேட்டு, நம்ப முடியாமல் தயக்கம் கொள்கின்றனர். காரணம், பென்டகனில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தகவலில் யுஎஃப்ஒக்கள் பற்றி சாட்சிகள் இருப்பதாகவும், UFO மூலம் பூமிக்கு வந்த ஏலியன் மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டதாகவும் அந்த கோப்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அபத்தமான கூற்றுக்கள், பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சியின் பென்டகன் ஆவணங்களில் காணப்பட்டுள்ளதாக தி யுஎஸ் சன் பத்திரிகை கூறியுள்ளது.

யுஎஃப்ஒக்கள் சாட்சிகளுடன் பாலியல் சந்திப்புகளை மேற்கொண்டனரா?

யுஎஃப்ஒக்கள் சாட்சிகளுடன் பாலியல் சந்திப்புகளை மேற்கொண்டனரா?

தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பெறப்பட்டது என்று தி யுஎஸ் சன் கூறியுள்ளது. 'மனித மற்றும் உயிரியல் திசுக்களில் முரண்பாடான கடுமையான மற்றும் சப்அகுட் ஃபீல்ட் எஃபெக்ட்ஸ்' (Anomalous Acute And Subacute Field Effects on Human and Biological Tissues) என்ற தலைப்பிலான அறிக்கை, அமானுஷ்ய அனுபவங்கள் அல்லது "விரோதமான மேம்பட்ட விண்வெளி அமைப்புகளால் மனித பார்வையாளர்களுக்குக் காயங்கள்" உள்ள மனிதர்களின் உடல்நல பாதிப்பைக் கண்காணித்து ஆராய்கிறது.

யுஎஃப்ஒக்களால் கணக்கிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் சந்திப்புகளா?

யுஎஃப்ஒக்களால் கணக்கிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் சந்திப்புகளா?

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிவிலியன் ஆராய்ச்சி நிறுவனம் MUFON ஒரு பட்டியலைத் தொகுத்தது. இது அறிக்கையின் "பயனுள்ள தரவுத்தளத்தில் (useful database)" இடம்பெற்றுள்ளது. மேலும், இது மனிதர்கள் மீது, UFO பார்வைகளின் உயிரியல் விளைவுகள் எப்படிப் பாதிப்புகளை உருவாகியுள்ளது என்பதைப் பட்டியலிட்டுள்ளது. இதில் "வெளிப்படையான கடத்தல்" (apparent abduction), "கணக்கிடப்படாத கர்ப்பம்" (unaccounted for pregnancy), பாலியல் சந்திப்புகள் (sexual encounters), டெலிபதியின் (telepathy) அனுபவம் மற்றும் டெலிபோர்ட்டேஷன் போன்ற வினோதமான நிகழ்வுகள் பற்றி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பென்டகன் அறிக்கையில் 'ஐந்து' பாலியல் சந்திப்புகள் பற்றிய பதிவு இருப்பது உண்மை தானா?

பென்டகன் அறிக்கையில் 'ஐந்து' பாலியல் சந்திப்புகள் பற்றிய பதிவு இருப்பது உண்மை தானா?

யுஎஃப்ஒக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஐந்து பாலியல் சந்திப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையின் கணக்குகள் தெளிவாக காண்பிக்கிறது. UFO காட்சிகள், மனித சாட்சிகளைக் காயப்படுத்தலாம் அல்லது UFO கதிர்வீச்சு தீக்காயங்கள், மூளை பிரச்சினைகள் மற்றும் சேதமடைந்த நரம்புகளால் மனிதர்கள் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. DIA க்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையில், அத்தகைய UFO பொருள்கள் "அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக" இருக்கலாம் என்றும் எச்சரித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

UFO வாகனங்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தகவல்

UFO வாகனங்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தகவல்

"விரோதமான வாகனங்கள், குறிப்பாக வான்வழி வாகனங்கள் மற்றும் அவை அருகாமையில் இருக்கும் போது மனிதர்கள் காயமடைவது கண்டறியப்பட்டுள்ளது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயங்கள் மின்காந்த கதிர்வீச்சுடன் தொடர்புடையவை என்றும் அவற்றை "ஆற்றல் தொடர்பான உந்துவிசை அமைப்புகளுடன்" இணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சினால் ஏற்படும் வெப்பம் மற்றும் தீக்காயங்கள், மூளையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் திறன் ஆகியவை சாத்தியமான காயங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

'பேய்களுடன் சந்திப்பு' பற்றி ஆவணங்களும் இதில் இருக்கிறதா?

'பேய்களுடன் சந்திப்பு' பற்றி ஆவணங்களும் இதில் இருக்கிறதா?

பென்டகனின் ரகசிய யுஎஃப்ஒ திட்டமான மேம்பட்ட ஏவியேஷன் த்ரெட் ஐடென்டிஃபிகேஷன் புரோகிராம் (ஏஏடிஐபி) தொடர்பான 1500 பக்கங்களுக்கு மேல் உள்ள டிஐஏ ஆவணங்களின் ஒரு பகுதியான அறிக்கையில், "பேய்களுடன் சந்திப்புகள்" எப்படி வகைப்படுத்துவது என்பதை விவரிக்கும் மற்றொரு ஆவணமும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டிஸ், ஸ்பிரிட்ஸ், குட்டிச்சாத்தான்கள், எல்வ்ஸ் மற்றும் பிற புராண/புராண பொருட்கள் பற்றிய தகவலும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இறுதியாக நான்கு ஆண்டுகள் பிறகு வெளியான தகவல்

இறுதியாக நான்கு ஆண்டுகள் பிறகு வெளியான தகவல்

இத்துடன் "AN3" மற்றும் "AN3 நிறுவனங்களுடனான சாட்சி தொடர்பு" அதாவது AN4 என வகைப்படுத்தப்பட்ட மரண அனுபவங்கள் மற்றும் மத அற்புதங்கள் பற்றியும் சில தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பென்டகனின் இரகசிய யுஎஃப்ஒ திட்டத்துடன் தொடர்புடைய 1,500 பக்கங்களுக்கு மேல் உள்ள DIA ஆவணங்களின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை இருக்கிறது. தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ், AATIP தொடர்பான அனைத்து "கோப்புகள், அறிக்கைகள் அல்லது வீடியோ கோப்புகளின்" நகலை டிசம்பர் 18, 2017 அன்று சமர்ப்பிக்கும் படி சன் முதலில் கோரியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Pentagon Docs Claims UFOs Had Physical Encounters With Human Witnesses And Left One Woman Pregnant : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X