Home
News

அமெரிக்க ராணுவத்திற்கு புதிய பிளாக்பெர்ரி போன்!

By Super
அமெரிக்க ராணுவத்திற்கு புதிய பிளாக்பெர்ரி போன்!

அமெரிக்க ராணுவ தலைமையகத்திற்கு புதிய பிளாக்பெர்ரி-7 என்ற போன் மாடலை உருவாக்கி தந்துள்ளது பிளாக்பெர்ரி. இந்த பிளாக்பெர்ரி-7 போன் மாடலை பயன்படுத்த அனுமதியும் வழங்கி உள்ளது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன்.

ராணுவத்தில் பயன்படுத்தும் போன் மாடல்கள் என்பதால் பாதுகாப்பு மிக அவசியமாகிறது. இதனால் அமெரிக்க ராணுவம் பிளாக்பெர்ரி மொபைல் மாடல்களை தான் பயன்படுத்தி வருகிறது.

ஆகவே எந்த ஒரு தகவல்களும் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. அப்படியே தகவல்களை வெளியிட்டாலும், அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும் வகையில் பிளாக்பெர்ரியின் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி புதிய தொழில் நுட்பங்களை கொண்ட பிளாக்பெர்ரி மாடல்களை பயன்படுத்தி வரும் அமெரிக்க பென்ட்டகன் ராணுவ தலைமையகத்திற்கு பிளாக்கபெர்ரி-7 என்ற புதிய போன் மாடலை உருவாக்கி தந்துள்ளது பிளாக்பெர்ரி நிறுவனம்.

மொத்தமாக 2 லட்சத்தி 50 ஆயிரம் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

அமெரிக்க ராணுவம், பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனை இந்த அளவு பயன்படுத்த காரணம், பிளாக்பெர்ரி இயங்குதளத்தின் மூலம் முழு பாதுகாப்பினையும் பிளாக்பெர்ரி நிறுவனம் வழங்கி வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X