தமிழ் ராக்கர்ஸ் வலையில் சிக்கிய 'பெண்குயின்'! அமேசானை நம்பிய கீர்த்தி சுரேஷ் குழு பாவம்!

|

அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் OTT தளத்தில் இன்று பெண்குயின் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் இன்று அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட இந்த படத்தை தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் கசியவிட்டு உள்ளனர்.

OTT தளத்தில் வெளியிடப்பட்ட பெண்குயின்

OTT தளத்தில் வெளியிடப்பட்ட பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்திடாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் என்று பல மாதங்களாக இந்த திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாகத் திரை உலகமகே ஸ்தம்பித்து பொய் இருக்கும் நிலையில், திரைப்படங்களை வெளியிடுவதில் மிகுந்த சிக்கல் எழுந்துள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து OTT தளத்தில் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் திரைப்படங்களை ஆன்லைன் இல் வெளியிடத் தயாரிப்பார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 திரைப்படம் வெளியான சில மணி நேரத்தில் கசிந்தது

திரைப்படம் வெளியான சில மணி நேரத்தில் கசிந்தது

சமீபத்தில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படமும் இப்படி தான் OTT தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த பெண்குயின் திரைப்படமும் அமேசான் தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படம் வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது வலைத்தளத்தில் இந்த படத்தை வெளியிட்டுப் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!

அமேசானில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம்

அமேசானில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம்

அமேசான் தலத்தில் வெளியாகும் படங்களை கூட தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைப்பதில்லை, கடந்த மாதம் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசியவிட்டு வேடிக்கை பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கிப் போயிருக்கும் நிலையில் கூட தமிழ் ராக்கர்ஸின் ஆட்டம் மட்டும் அடங்கவே இல்லை.

தமிழ் ராக்கர்ஸ் வலையில் இருந்து தப்ப முடியாத திரையுலகம்

தமிழ் ராக்கர்ஸ் வலையில் இருந்து தப்ப முடியாத திரையுலகம்

எங்கு? எப்படி? படத்தை வெளியிட்டாலும் இவர்களின் வலைக்குள் சிக்காமல் எந்த படமும் தப்புவதில்லை, இன்னும் சொல்லப்போனால், சில பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் கூட இவர்களின் வலையில் சிக்காமல் இருப்பதில்லை. திரைப்படம் ரிலீஸான ஒரு சில மணிநேரங்களில் அதை ஆன்லைனில் கசியவிடுவதை ஃபுல்டைம் வேலையாகவே தமிழ் ராக்கர்ஸ் வைத்துள்ளது.

மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

தமிழ் ராக்கர்ஸை தடுத்து நிறுத்த மக்கள் உதவ வேண்டும்

தமிழ் ராக்கர்ஸை தடுத்து நிறுத்த மக்கள் உதவ வேண்டும்

தமிழ் ராக்கர்ஸை தடுத்து நிறுத்த பலரும் முயன்று வருகின்றனர், ஆனால், எந்த ஒரு முயற்சியும் இவர்களை தடுத்ததாக தெரியவில்லை. இவர்களை தடுத்து நிறுத்த மக்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களிலிருந்து திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்குப் பதிலாக நேரடியாக அதிகாரப்பூர்வமான தளங்களில் பார்த்தால் நாட்டில் நிலவும் ஆன்லைன் பைரசியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Pengiun Tamil Movie Got Released Online By Piracy Website Tamil Rockers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X