உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசிடம் பதில்.

|

சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் 1400நபர்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள் பெகாசஸ் எனும் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியர்களின் வாட்ஸ்ஆப் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் தற்போது மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசிடம் பதில்.

அதன்படி அதிமாக உளவு பார்க்கும் பெகாசஸ் எனும் மென்பொருளால் இந்தியாவில் 121பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் பதில் அளித்துள்ளது. ஆனாலும் 20பேரின் வாட்ஸ்ஆப் தகவல் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்போதிலும் வாட்ஸ்ஆப்-ல் எந்தமாதிரியான தகவல் திருடப்பட்டது என்பது பற்றி கண்டறிய முடியவில்லை என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது மிகவும் சிக்கலானதும், நுட்பமானதுமான இந்த உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசிடம் பதில்.

மேலும் குறிப்பிட்ட சிலரே இதானல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு மீறல் இல்லை என்றும் மத்திய அரசிடம் பேஸ்புக் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யும் படியும் இல்லையென்றால் தங்களின் அனைத்து தகவலும் பொதுத்தளத்தில் வெளியாகும் என நபர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சரிக்கை விடுத்த நபர் வேறு யாரும் இல்லை, டெலிகிராம் ஆப்பின் நிறுவனர் பரேல் துரோவ் என்பவர்தான். டெலிகிராம் என்பது குறித்து நம்மில் பலருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. அதுவும் வாட்ஸ் ஆப் போன்று ஒரு செயலிதான். டெலிகிராம் ஆப் 2013 ஆம் ஆரம்பிக்கப்பட்டது அப்போது இருந்து இப்போது வரை வாட்ஸ் ஆப்பிடம் போட்டிப்போடும் ஒரே நிறுவனம் டெலிகிராம் தான்.

உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசிடம் பதில்.

இதுகுறித்து பரேல் கூறுகையில், யார் ஒருவர் தங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளாத பட்சத்தில், அவர்கள் வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. தங்களின் மெசேஜ்கள் மற்றும் போட்டோக்கள் ஒரு நாள் பொதுத் தளத்தில் வெளியாக கூடாது என்றால் உடனடியாக வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pegasus attacked 121 in India, breached 20: WhatsApp to government : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X