அரளுது மார்க்கெட்.. உலகின் முதல் ஸ்லிம்மான Smartwatch.. இப்போ இந்தியாவில் விற்பனை.. விலை என்ன? என்ன மாடல்?
உலகத்தின் மிகவும் ஸ்லிம்மான ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் (World's Slimmest Bluetooth Calling Smartwatch) சாதனத்தை பெப்பிள் (Pebble) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் ஆடம்பரமான தோற்றத்துடன் வெறும் 40g எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன?
Pebble Royale: பெப்பிள் பிராண்டு இப்போது அதன் புதிய ஸ்லிம் சைஸ் ஸ்மார்ட்வாட்ச் சாதனமான பெப்பிள் ராயல் (Pebble Royale) என்ற மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பெப்பிள் ராயல் (Pebble Royale) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் உலகின் மிக மெல்லிய புளூடூத் காலிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் ஸ்லிம்மான ஸ்மார்ட்வாட்ச்: இதை நிறுவனம் மிகவும் ஸ்லிம்மான சைசில், மிகவும் ஆடம்பரமான ரிச் லுக் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை போன்ற நேர்த்தியான தோற்றத்தில் வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ ஸ்டைன்லெஸ் ஸ்டீல் டயல் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் டயல் வெறும் 3mm தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதன் பாடி தடிமன் 6mm மட்டுமே உள்ளது.
பெப்பிள் ராயல் (Pebble Royale): இந்த புதிய பெப்பிள் ராயல் (Pebble Royale) அல்ட்ரா வைட் கலர் கேமட், சூப்பர் வைட் வியூவிங் ஆங்கிள் மற்றும் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே ஆதரவு போன்ற அம்சங்களைக் கொண்ட சூப்பர் AMOLED 1.43" இன்ச் டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆதரிக்கிறது. இந்த சாதனம் மிகவும் அழகான டயல் பேஸ் உடன் பல ராயல் லுக் வாட்ச் பேஸ் ஆதரவை கொண்டுள்ளது.
ப்ளூடூத் வாய்ஸ் காலிங்: இது மட்டுமல்லாமல், இந்த புதிய பெப்பிள் ராயல் (Pebble Royale) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மேம்பட்ட ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (BT voice calling) அம்சங்களையும் கொண்டுள்ளது. இது உங்கள் வாய்ஸ் அல்லது குரல் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும், வாய்ஸ் கால் அழைப்புகளை பெறவும் உதவுகிறது. ஆம், இது இன்பில்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது.

பெப்பிள் ராயல் விவரக்குறிப்பு: இந்த பெப்பிள் ராயல் (Pebble Royale) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அலாரம், கேலெண்டர், கால்குலேட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர் மற்றும் SpO2 போன்ற அம்சங்களை சுகாதார கண்காணிப்பு போன்ற பிற ஸ்மார்ட் அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 5 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP67 உடன் வருகிறது.
40 கிராம் மட்டுமே எடை: பெப்பிள் ராயல் (Pebble Royale) ஸ்மார்ட்வாட்ச் மிகவும் ஸ்லிமானது. இது 40 கிராம் மட்டுமே எடை கொண்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் லெதர் அல்லது மெட்டல் மற்றும் மேக்னெட் மற்றும் விஸ்கி பிரவுன், பைன் கிரீன் மற்றும் கோபால்ட் ப்ளூ போன்ற வெவ்வேறு வண்ண விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
விலை: பெப்பிள் ராயல் (Pebble Royale) ஸ்மார்ட்வாட்ச் என்ற இந்த உலகின் முதல் ஸ்லிம் ப்ளூடூத் கால்லிங் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இப்போது ரூ. 4,2999 என்ற அறிமுக சிறப்பு சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது பெப்பிள் ராயல் (Pebble Royale) என்ற பெயருடன் pebblecart.com இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இதுவொரு சிறப்பு விலை என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications