யார் சொன்ன இது டம்மி பீஸுனு! கெத்தான தோற்றத்துடன் கம்மி விலையில் Pebble Cosmos Vogue வாட்ச்!
Pebble நிறுவனம் இந்திய சந்தையில் Cosmos Vogue எனப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அறிமுகம் செய்துள்ளது. இது AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் புளூடூத் அழைப்பையும் ஆதரிக்கும் அம்சத்துடன் வருகிறது. இது பட்ஜெட் விலையில் மெட்டாலிக் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் உடன் வருகிறது.
இவ்வளவு குறைந்த விலையில், மெட்டாலிக் பில்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வழக்கமான ஹெல்த் டிராக்கிங் அம்சங்கள், ஃபைண்ட் மை ஃபோன் அம்சம் போன்ற பல ஸ்மார்ட் வாட்ச் (smartwatch) அம்சங்களுடன் இந்த Pebble Cosmos Vogue சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? இதை எப்போது, எங்கிருந்து வாங்கலாம்? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பெப்பிள் காஸ்மோஸ் வோக் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் விலை என்ன? என்று பார்க்கையில், இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனமான Pebble Cosmos Vogue இன் விலை ரூ.2,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜெட் பிளாக் மற்றும் மிட்நைட் ப்ளூ சிலிகான் ஸ்ட்ராப் உடன் வருகிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் கிளாசிக் கோல்ட் மெட்டாலிக் ஸ்ட்ராப் விருப்பங்களுடனும் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.
இந்த Pebble ஸ்மார்ட்வாட்ச் சாதனம் Pebble பிராண்டின் சொந்த இணையதளம் மற்றும் Flipkart இலிருந்து வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்பிள் காஸ்மோஸ் ஸ்மார்ட் வாட்சின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த பெபிள் காஸ்மோஸ் வோக் ஒரு பெரிய 1.96' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மோட் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் பேஸ் அம்சங்களுடன் வருகிறது. இந்த பெபிள் காஸ்மாஸ் வோக் ஸ்மார்ட்வாட்ச் IP67 சான்றளிக்கப்பட்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் வலதுபுறத்தில் சுழலும் கிரௌன் பட்டனையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் கொண்டுள்ளது. இது ஒரு சதுர டயல் டிஸ்பிளேவுடன் வருகிறது. கிரௌன் பட்டன் மூலம் மெனுவை ஸ்க்ரோல் செய்துள்ளனர்.
இந்த Pebble Cosmos Vogue ஸ்மார்ட் வாட்ச் ஆனது இதயத் துடிப்பு மானிட்டர், SpO2 சென்சார் மற்றும் உங்கள் உடல்நல அளவீடுகளைக் கண்காணிப்பதற்கான ஸ்லீப் டிராக்கர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு கூடுதல் ஜென் பயன்முறையுடன் வருகிறது. அதே நேரத்தில் பல ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. பயனர்களின் ஸ்போர்ட்ஸ் உள்ளடக்கங்களை கண்காணிப்பதற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் மியூசிக் மற்றும் கேமரா கட்டுப்பாடு, வானிலை புதுப்பிப்புகள், கால்குலேட்டர், ஃபைண்ட் மை ஃபோன், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது. இது 240mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புளூடூத் அழைப்பை இயக்க கடிகாரத்தில் உள்ளமைக்கப்பட்ட மைக் மற்றும் ஸ்பீக்கருடன் வருகிறது. இந்த சாதனம் தற்போது வாங்க கிடைக்கிறது. இதன் விலை ரூ.2499 மட்டுமே. உங்களுக்கு பிடித்த சிலிக்கான் மாடல் அல்லது மெட்டாலிக் ஸ்ட்ராப் மாடலை எடுத்து வாங்கிக்கொள்ளவும்.


Click it and Unblock the Notifications