ஹிரோசிமா, நாகசாகி குண்டு வீச்சு தினம் ஒரு ஞாபகம்.!

அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் குண்டு வீசப்பட்ட தகவலை அட்லாண்டிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்கப்பல் அகஸ்டாவிலிருந்து அறிவித்தார். இதற்கு முன் உருவாக்கப்பட்ட பெரிய குண்டை விட 2 ஆயிரம் மடங்கு

|

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதே நாளில் அணுகுண்டடை வீசியது அமெரிக்கா.

இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதன் புகைப்பட காட்சிகளை காணலாம்.

முதல் அணுகுண்டு வீச்சு:

முதல் அணுகுண்டு வீச்சு:

அமெரிக்கா ஹிரோஷிமா நகர் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இதில் ஏராளமான பொருட் சேதகங்களும் உயிர் சேதங்களும் ஏற்பட்டன. வானளவு உயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டமாகின

2 ஆயிரம் மடங்கு பெரியது குண்டு:

2 ஆயிரம் மடங்கு பெரியது குண்டு:

அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் குண்டு வீசப்பட்ட தகவலை அட்லாண்டிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்கப்பல் அகஸ்டாவிலிருந்து அறிவித்தார். இதற்கு முன் உருவாக்கப்பட்ட பெரிய குண்டை விட 2 ஆயிரம் மடங்கு பெரிய குண்டு அதிபர் எனவும் அவர் கூறினார்.

குண்டின் பெயர் லிட்டில் பாய்:

குண்டின் பெயர் லிட்டில் பாய்:

ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு "லிட்டில் பாய்" எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது.

அமெரிக்க B - 29:

அமெரிக்க B - 29:

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது.

ஆவியான சம்பவம்:

ஆவியான சம்பவம்:

குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் அப்போதே ஆவியாகினர்.

ஜப்பான் அறிவிப்பு:

ஜப்பான் அறிவிப்பு:

இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

1,40,000 பேர் பலி:

1,40,000 பேர் பலி:

ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

நாகசாகி மீது மீண்டும் குண்டு வீச்சு:

நாகசாகி மீது மீண்டும் குண்டு வீச்சு:

இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.

நேசநாடுகளிடம் சரணடைந்த ஜப்பான்:

நேசநாடுகளிடம் சரணடைந்த ஜப்பான்:

இந்த அணுகுண்டு வீச்சால் ஆசிய உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால், குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தகாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டதும், 1945 ஆக்ஸட் 8ஆம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. அதே மாதம் 14ஆம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.

Best Mobiles in India

English summary
Peace Day: Remembering Hiroshima and Nagasaki : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X