Home
News

Paytm-க்கு தங்கமான மனசு.. இனி இதன் மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த UPI செயலிகள் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சில நொடிகளில் பணம் அனுப்பவும் முடியும், பெறவும் முடியும். எனவே தான் இந்த யுபிஐ செயலிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பேடிஎம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதாவது இந்தியாவில் பேடிஎம் (Paytm) பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் தங்க நாணயம் கிடைக்கும். எனவே நீங்கள் இனி தங்கம் சேர்க்க வேண்டும் என்றால் தனியாகச் சீட்டு போடவோ அல்லது தனியாக முதலீடு செய்யவோ அவசியம் இருக்காது. உங்களது அன்றாட செலவுகளே இனி உங்களுக்குத் தங்கத்தைப் பெற்றுத் தரும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Paytm-க்கு தங்கமான மனசு.. இனி பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..

எப்படி தங்கத்தைப் பெறுவது? இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு பேடிஎம் நிறுவனம் இந்த தங்க நாணயம் திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே பேடிஎம் செயலி பயன்படுத்தி நீங்கள் ஒரு கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினாலும் சரி அல்லது ஆன்லைன் மூலம் பொருள் வாங்க பணம் செலுத்தினாலும் சரி, யாருக்கேனும் பணம் அனுப்பினாலும் சரி, ரீசார்ஜ் செய்வது, பில்களை கட்டுவது என பேடிஎம் செயலியின் மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் உங்களுக்குத் தங்க நாணயத்தைச் சேர்த்துக் கொடுக்கும்.

குறிப்பாக நாம் மேற்கொள்ளக்கூடிய பரிவர்த்தனையின் மதிப்பில் ஒரு சதவீதம் தொகை உங்களுக்கான தங்க நாணயமாக உங்கள் கணக்கில் வந்து சேரும் என்பதை கவனத்தில் கொள்க. ஒரு உதாரணமாக நீங்கள் ஆயிரம் ரூபாய் பேடிஎம் மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு பத்து ரூபாய் மதிப்பிலான கோல்ட் காயின் உங்களது கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

அதன்பின்பு இந்த கோல்ட்டு காயின்களை நீங்கள் டிஜிட்டல் கோல்டாக மாற்றிக் கொள்ளலாம். இது உங்களது கணக்கில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும். பின்பு நாம் பேஎடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் நமக்கு தங்கத்தை வாங்கி வைக்க உதவும் என்று பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்து வகையான பேமென்ட்களுக்கு கோல்ட் காயின் உங்களுக்கு கிடைக்கும். இதுதவிர கிரெடிட் கார்டு, ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களுக்கும் இரட்டிப்பு கோல்டு காயின்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பேடிஎம் செயலி மூலம் கிரெடிட் கார்டு அல்லது ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் 20 ரூபாய் வரை கோல்டு காயின்கள் கிடைக்கும். இதை நீங்கள் அப்படியே உங்களது கணக்கில் கோல்டாக சேமிக்க முடியும்.

Paytm-க்கு தங்கமான மனசு.. இனி பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..

அதன்பின்னர் நமக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த டிஜிட்டல் கோல்டை பயன்படுத்தி பணமாக மாற்றலாம் அல்லது நகையாக மாற்றலாம் அல்லது பார்களாக வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் அனைத்து பேஎடிம் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் பேஎடிம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக பேடிஎம் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm users get gold coin rewards on UPI and online payments: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X