எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேடிஎம் 'நியர்பை' அம்சம்.!

ரூ.500 மற்றும் ரோ.1000/- நோட்டுகள் தடை காரணமாக உங்கள் சிரமத்தை தவிர்க்க வழிவகுக்கும் ப்பேடிஎம் 'நியர்பை' அம்சம்.

|

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் தடை என்ற அறிவிப்பு நாடு முழுவதையும் திக்கு முக்காட வைக்கிறது. இந்த தடைக்கு பின்புலமாக நல்ல நோக்கங்கள் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை விட அன்றாட செலவிற்கு கையில் பணம் இருக்கிறதா இல்லையா என்பதே முக்கிய கேள்வியாக திகழ்கிறது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிரமத்தை தவிர்க்க உதவும் நோக்கத்தில் பேடிஎம் 'நியர்பை' என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. நீங்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளது.

பேடிஎம் 'நியர்பை' என்றால் என்ன.?

பேடிஎம் 'நியர்பை' என்றால் என்ன.?

ரூ.500 மற்றும் ரூ.1000 தடைக்காகவே இந்தியாவில் 'நியர்பை' அம்சம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விருப்பமானது குறைந்த அளவிலான பணத்தை கூட பேடிஎம் மூலம் பெற்றுக்கொள்ள தயாரக இருக்கும் அருகாமை வியாபாரிகள் கண்டறிய அனுமதிக்கிறது.

பயன்படுத்துவது எப்படி.?

பயன்படுத்துவது எப்படி.?

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பேடிஎம் ஆப்பை மொபைலில் அல்லது இணையதளத்தில் திறக்கவும், பின்னர் நெருங்கிய வியாபாரி களை கண்டறிய ஸ்க்ரீனின் கீழே புதிய நியர்பை அம்சத்தை தேடவும். இந்த வழியில் நீங்கள் ரொக்க பணத்திற்கு பதிலாக வேலட்டை பயன்படுத்தி உணவு, பொருட்கள் அல்லது ஏனைய அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.

புதிய அம்சத்தின் கீழ் 200,000 அருகாமை வியாபாரிகள்

புதிய அம்சத்தின் கீழ் 200,000 அருகாமை வியாபாரிகள்

தற்போது, நிறுவனத்தின் படி, புதிய அம்சத்தின் கீழ் 200,000 அருகாமை வியாபாரிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர் மற்றும் 800,000 வியாபாரிகள் குறுகிய காலத்தில் சேர்க்கப்பட உள்ளனர். எனவே, விற்பனையாளர் இடங்களை அடையும் பிரச்சினை, மணி கணக்கில் வரிசையில் நின்று ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போன்ற அவதிகளை பேடிஎம் வாசி=கால் அனுபவிக்க வேண்டாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

'ஆட் கேஷ்'

'ஆட் கேஷ்'

பயனர்களுக்கு அருகில் உள்ள விற்பனையாளர் கண்டுபிடிக்க உதவுவது மட்டுமின்றி இந்த அம்சம் அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் பணப்பையில் 'ஆட் கேஷ்' நிகழ்த்த அருகாமை ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் கிளைகளை சுட்டிக்கட்டவும்ஸ் செய்கிறது.

பரிவர்த்தனைகள்

பரிவர்த்தனைகள்

நாட்டில் ரூ.500/- மற்றும் ரூ.1000/- தடையை தொடர்ந்து. பேடிஎம்-ன் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் 250% அதிகரித்துள்ளது மற்றும் ஆப் பதிவிறக்கம் 200% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இண்டர்நெட் இல்லாமல் போட்டோ அனிமேஷன் உருவாக்குவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm Rolls Out ‘Nearby’ Feature: Everything You Need to Know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X