Home
News

Google Pay, PhonePe-க்கு கும்பிடு.. ரூ.1,000 கூட இல்லையா.. 30 நாட்கள் கழிச்சு கொடுங்க.. Paytm போட்ட ஒரே போடு!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) ஆப்களை தூக்கி சாப்பிடும்படி பேடிஎம் (Paytm) நிறுவனம் ஆனது பேடிஎம் போஸ்ட்பெய்டு (Paytm Postpaid) பேமெண்ட்களை கொடுக்கிறது. இந்த கிரெடிட் பேமெண்ட்கள் மூலம் உங்களது யுபிஐ அக்கவுண்ட்டில் பணம் இல்லையென்றாலும், பணத்தை அனுப்பி கொள்ளலாம். 30 நாட்களுக்கு பிறகு அந்த பணத்தை வட்டி இல்லாமல் செலுத்தி கொள்ளலாம். இது கிட்டத்தட்ட கிரெடிட் கார்டு போல இருக்கிறது. ஆனால், யுபிஐ பேமெண்ட்களை செய்ய முடிகிறது.

பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரை யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். கையில் பணத்தை வைத்து கொண்டு அதை பாதுகாக்க வேண்டியது கிடையாது. இதனாலேயே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் அதிகப்படியான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆனால், இதற்கு பேங்க் அக்கவுண்ட்டில் பணம் இருக்க வேண்டும்.

Google Pay, PhonePe-க்கு கும்பிடு.. ரூ.1,000 கூட இல்லையா.. 30 நாட்கள்!

இப்போது, அது மாறப்போகிறது. பேடிஎம் நிறுவனமானது, பேடிஎம் போஸ்ட்பெய்டு பேமெண்ட்களுக்கு அனுமதி கொடுக்கிறது. இந்த போஸ்ட்பெய்டு பேமெண்ட்கள் மூலம் உங்களது அக்கவுண்ட்டில் பணம் இல்லையென்றாலும், வழக்கம்போல பணத்தை அனுப்பி கொள்ளலாம். அந்த பணத்தை 30 நாட்களுக்கு பிறகு திருப்பி செலுத்தி கொள்ளலாம்.

இதற்காக எந்த வட்டியையும் செலுத்த வேண்டியது கிடையாது. இந்த பேடிஎம் போஸ்ட்பெய்டு பேமெண்ட்களை கொடுக்க எஸ்எஸ்எப்பி (SSFB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank) நிறுவனத்துடன் பேடிஎம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல என்பிசிஐ (NPCI) அனுமதி பெற்றுள்ளது.

இந்த பேடிஎம் போஸ்ட்பெய்டு பேமெண்ட்களானது, கிரெடிட் லைன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, கஸ்டமர்களின் அக்கவுண்ட் கேபாசிட்டுக்கு ஏற்ப அவர்களுக்கான கிரெடிட் லைன் தொகை ஒதுக்கப்படும். இந்த தொகைக்குள் அவர்கள் பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். இதில் அனைத்து யுபிஐ பேமெண்ட்களும் பொருந்துகிறது.

ஆகவே, கியூஆர் கோட் பேமெண்ட்கள், பில் பேமெண்ட்கள், ரீசார்ஜ்கள், சந்தா செலுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ.60,000 வரையில் கிரெடிட் லைன் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், யுபிஐ அக்கவுண்ட்டில் பணம் இல்லையென்றாலும் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

இது குறிப்பிட்ட பேடிஎம் யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒட்டுமொத்த யூசர்களுக்கும் அடுத்தடுத்து கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, உங்களது பேடிஎம் ஆப்-ஐ ஓப்பன் செய்து பேடிஎம் போஸ்ட்பெய்ட் ஆப்ஷன் தோன்றுகிறதா என்பதை பார்த்துவிட்டு, அதை பயன்படுத்துங்கள். இதை எப்படி செய்வது என்பதையும் இங்கே பார்க்கலாம்.

பேடிஎம் ஆப்-ஐ ஓப்பன் செய்து, ஹோம் பேஜில் தோன்றும் பேடிஎம் போஸ்ட்பெய்ட் ஐகானை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது கிரெடிட் லைன்னை உருவாக்க வேண்டும். ஆகவே, உங்களது பேங்க் மற்றும் அடையாளம் சார்ந்த விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கும். அதேபோல கேஒய்சி (KYC) வெரிபிகேஷன் இருக்கும்.

இதை செய்த பிறகு கிரெடிட் லைன்னை உங்களது யுபிஐ அக்கவுண்ட்டுடன் லிங்க் செய்ய வேண்டும். இதில் கிரெடிட் லைன் தொகையும் தெரிவிக்கப்பட்டுவிடும். இதையடுத்து சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குடன் உங்களது யுபிஐ அக்கவுண்ட் லிங்க் செய்யப்படும். இதில் ஆதார் கார்டு மூலம் செய்யப்படும் வெரிபிகேஷன் இருக்கும்.

இதை செய்து முடித்த பிறகு உங்களுக்கு பின் நம்பர் ஒதுக்கப்படும். இதையெல்லாம், செய்து முடித்த பிறகு உங்களுக்கான கிரெடிட் லைன் ஒதுக்கப்படும். இதனடிப்படையில் யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். இப்படி செய்யும் பேமெண்ட்களுக்கு அடுத்த மாதம் பணத்தை செலுத்தி கொள்ளலாம். 30 நாட்கள் வரை வட்டி கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm Postpaid on UPI Spend Now Pay Next Month With Interest Free Credit Payments For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X