Home
News

ரூ.5000 தான் UPI லிமிட்.. இனி ஸ்கூல், காலேஜ் பசங்க அதிகமா செலவு பண்ண முடியாது.. வந்தது Pocket Money அம்சம்!

டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான பேடிஎம், அதன் ஆப்பில் பேடிஎம் பாக்கெட் மணி (Paytm Pocket Money) என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வங்கி கணக்கு இல்லாத இளம் பருவத்தினர் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் அம்சமாகும்.

மேலும், இந்த பேடிஎம் பாக்கெட் மணி அம்சமானது - பெற்றோர்கள் அல்லது நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் இளம் பருவத்தினரின் மாதாந்திர செலவு வரம்புகளை (monthly spending limits) நிர்ணயிக்கவும், அவர்கள் யுபிஐ வழியாக செய்யும் செலவுகளை ஆப் வழியாக நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

ரூ.5000 தான் UPI லிமிட்.. வந்தது Pocket Money அம்சம்!

சுருக்கமாக - பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், மெட்ரோ பயணங்கள், வாடகை கார்கள், மொபைல் ரீசார்ஜ்கள், ஷாப்பிங் போன்ற அன்றாட பணம் செலுத்துதல்களுக்கு இளம் பருவத்தினருக்கும், மாணவர்களுக்கும் உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஒரு மேற்பார்வையிடப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தும் அதே வேளையில், அவர்களை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.

"பேடிஎம் ஸ்பெண்ட் சம்மரி (Paytm Spend Summary) மூலம், குடும்பங்கள் தத்தம் செலவு முறைகளை மதிப்பாய்வு செய்யலாம், அல்லோவன்ஸ்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், மேலும் இளம் பருவத்தினரை ஆரம்பத்திலேயே பாதுகாப்பான, பொறுப்பான பணப்பழக்கங்களுக்கு வழிநடத்தலாம்" என்று பேடிஎம் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் பேடிஎம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாக்கெட் மணி அம்சத்தின் மூலம் இளம் பருவத்தினர், "பணத்தையோ அல்லது தங்கள் சார்பாக பணம் செலுத்த பெற்றோரையோ சார்ந்திருக்காமல்" சுயமாக யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும் என்று பேடிஎம் கூறியுள்ளது. இது எப்படி வேலை செய்யும்? எவ்வளவு லிமிட் வைக்க முடியும்? இதோ விவரங்கள்:

பேடிஎம் பாக்கெட் மணி என்றால் என்ன? இது கடந்த ஆகஸ்ட் 2024 இல் என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் (National Payments Corporation of India) அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சர்க்கிள் (UPI Circle) அம்சத்தை போன்றது தான்.

யுபிஐ சர்க்கிள், ஒரு முதன்மை யுபிஐ பயனரை - பொதுவாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கொண்ட ஒருவரை - தனது துணைவர், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற நம்பகமான நபருக்கு அணுகலை வழங்கவும், அதே வங்கி கணக்கின் இரண்டாம் நிலை பயனராக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அவர்களை அங்கீகரிக்கவும் அனுமதிக்கிறது.

சுருக்கமாக, இது பல நபர்கள் ஒரே யுபிஐ ஐடியை பகிர்ந்து கொள்ளவும், அணுகலை நிர்வகிக்கவும், பரிவர்த்தனை வரம்புகளை அமைக்கவும் அனுமதிக்கிறது. பாக்கெட் மணி அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், டீன் ஏஜ் பிள்ளைகள் தங்கள் சொந்த மொபைல் போனில் உள்ள பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி மில்லியன் கணக்கான வணிகர்களிடம் பாதுகாப்பான யுபிஐ பேமண்ட்களை செய்யலாம்.

இதன் மூலம் டீன் ஏஜ் பிள்ளைகள், அவர்கள் தங்கள் சார்பாக பணம் செலுத்துவதற்காக பெற்றோரின் போனை இரவல் வாங்கவோ, ஓடிபி-களை கேட்கவோ, அல்லது வாட்ஸ்அப்பில் க்யூஆர் கோட்களை அனுப்பவோ தேவையில்லை," என்று பேடிஎம் நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது. இந்த சேவை சேமிப்பு கணக்குகள் மற்றும் நடப்பு கணக்குகளில் கிடைக்கிறது, ஆனால் சர்வதேசபேமண்ட்கள் மற்றும் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

லிமிட் செட் செய்வது எப்படி? பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்காக பேடிஎம் பாக்கெட் மணி அம்சத்தின் கீழ் லிமிட்களை செட் செய்யலாம். இதில், யுபிஐ நெட்வொர்க் முழுவதும் தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 வரையிலும், மாதாந்திர வரம்பாக ரூ.15,000 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் பாக்கெட் மணியில் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் உள்ளன. இதன்படி, கணக்கை அமைத்த முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.500 வரையிலும், முதல் 24 மணி நேரத்திற்குள் ரூ.5,000 வரையிலும் பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சத்தில் டிவைஸை லாக் செய்வது கட்டாயம் ஆகும்.

மேலும், பேடிஎம் யுபிஐ பின்-ஐ பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட செலவு வரம்புகளை மாற்றியும் அமைக்கலாம் அல்லது அணுகலை உடனடியாக எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். பேமண்ட் ஹிஸ்டரியை பேடிஎம் ஆப் வழியாக சரிபார்க்கலாம். சரி.. பேடிஎம் பாக்கெட் மணி அம்சத்தை எனேபிள் (இயக்குவது) செய்வது எப்படி? உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் போன்களில் பேடிஎம் பாக்கெட் மணியை செயல்படுத்துவதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ:

- ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் ஆப்பை அப்டேட் செய்யவும் (ஒருவேளை பாக்கெட் மணி விருப்பம் உங்கள் பேடிஎம் ஆப்பில் தெரியவில்லை என்றால், பேடிஎம் ஆப்பை - ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோரிலிருந்து லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.)
- ஆப்பை திறந்து, 'To Mobile / Contact' என்பதை கிளிக் செய்யவும்
- செட்டப்பை தொடங்க 'Pocket Money' என்பதை தேர்ந்தெடுக்கவும்
- நீங்கள் பேடிஎம் பாக்கெட் மணியை அமைக்க விரும்பும் காண்டாக்ட்-ஐ உள்ளிடவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்

- அவர்களின் யுபிஐ க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது அவர்களின் யுபிஐ ஐடியை உள்ளிடவும்
- தேவையான ஆவண விவரங்களை பயன்படுத்தி சரிபார்ப்பை முடிக்கவும்
- கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து மாதாந்திர செலவு வரம்பை அமைக்கவும் அல்லது கஸ்டம் லிமிட்டை (custom limit) உள்ளிடவும்
- செட்டப்பை முடிக்க, உங்கள் முதன்மை வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து உங்கள் பேடிஎம் யுபிஐ பின் -ஐ உள்ளிடவும்
- கடைசியாக பேடிஎம் பாக்கெட் மணியை செயல்படுத்த, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர் உங்கள் அழைப்பை ஏற்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Paytm Pocket Money Allow teenagers to make UPI payment without bank account With Parent controls How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X