பேடிஎம் பயனர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்- புதிய சேவை அறிமுகம்!

|

கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை பயன்பாடு அதிகமாக தேவைப்பட்டு வரும் நிலையில் பேடிஎம் பயனர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை எளிதாக பயன்படுத்தும் வகையில் Aadhar enabled payment system என்ற செயல்முறையை அறிமுகம் செய்துள்ளது.

வங்கிகளில் கூட்ட நெரிசல்

வங்கிகளில் கூட்ட நெரிசல்

கொரோனா பரவல் காரணமாக வங்கிகளில் சமூக இடைவெளியோடு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் கூட்டம் அதிகரித்த வண்ணமே காணப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் பெரும்பாலான பரிவர்த்தனைகள்

ஆன்லைனில் பெரும்பாலான பரிவர்த்தனைகள்

டிஜிட்டல் இந்தியா நடவடிக்கையில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதற்கேற்ப சில்லரை விற்பனை நிலையத்தில் தொடங்கி ஷாப்பிங் மால் வரை கார்ட் ஸ்வைப்பிங் க்யூஆர் ஸ்கேனிங் என அனைத்தும் நடைமுறையில் உள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள்

ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள்

தற்போது பெரும்பாலானோரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் உள்ளது. ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்கள் எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ளும்படியான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன.

புதிய செயல்முறை அறிமுகம்

புதிய செயல்முறை அறிமுகம்

அதன்படி ஆன்லைன் பரிவர்த்தனையை எளிதாக்கும்படி பேடிஎம் நிறுவனம் Aadhar enabled payment system என்ற முறையை அறிமுகம் செய்யப் போவதாக நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பேடிஎம் பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!

ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை

ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை

பேடிஎம் தங்களது வாடிக்கையாளர்கள் எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையாக ஆன்லைன் வணிக செயலியான பேடிஎம்மில் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (Aadhar enabled payment system) என்ற புதிய அறிமுகத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்ட் உதவியோடு வங்கி சேவை

ஆதார் கார்ட் உதவியோடு வங்கி சேவை

பேடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் கார்ட் உதவியோடு வங்கி சேவையை எளிதாக்குவதற்கான நடவடிக்கையாக இதுஇருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஆதார் கார்ட் மூலம் பணம் பெறுவது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட சேவை விவரங்களை பயன்படுத்த முடியும் என நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பெரிதளவு பயனடைவார்கள்

வாடிக்கையாளர்கள் பெரிதளவு பயனடைவார்கள்

பேடிஎம் அறிமுகம் செய்யும் இந்த திட்டத்தின் மூலம் கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் பெரிதளவு பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் செயலி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.50,000 அல்லது 10 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். மேலும் பரிவர்த்தனையின் போது அதிகபட்சமாக ரூ.10,000 வரை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த சேவை வழங்க முயற்சி

சிறந்த சேவை வழங்க முயற்சி

இது குறித்து பேசிய பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி சதிஷ் குமார் குப்தா கூறுகையில், டிஜிட்டல் வங்கி செயல்முறையை விரிவுப்படுத்தவும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும் முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Paytm Payments Bank introduced Aadhar enabled payment service

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X