ஐபோன்களுக்குச் சலுகை தரும் பேடிஎம், உடனே வாங்கினால் அதிகம் சேமிக்கலாம்.!!

Written By:

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பேடிஎம் மிகப்பெரிய கேஷ்பேக் விற்பனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் தனது பொருட்களுக்கு அதிகப்படியான சலுகை மற்றும் தள்ளுபடி போன்றவற்றைப் பேடிஎம் அறிவித்துள்ளது.

பேடிஎம் சலுகைகளில் ஆப்பிள் ஐபோன், சாம்சங் பிரபல ஸ்மார்ட்போன்களும் இடம் பெற்றுள்ளன. உடனே வாங்குபவர்களுக்கு அதிகச் சலுகைகள் காத்திருக்கிறதாம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் 7

ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7 256ஜிபி மாடல் ரூ.80,000க்குக் கிடைக்கிறது, இதோடு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் பணம் சுமார் 24 மணி நேரத்தில் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும். கேஷ்பேக் சலுகையில் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்பட மாட்டாது.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

ஐபோன் 6எஸ், ஐபோன் 6, ஐபோன் எஸ்இ, மற்றும் ஐபோன் 5எஸ் போன்ற கருவிகளுக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு மாடலுக்கும் கேஷ்பேக் தொகை மாறுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங்

சாம்சங்

பேடிஎம் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் சுமார் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் ரூ.59,900க்குக் கிடைக்கிறது. இதனால் இந்தக் கருவிக்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.

தள்ளுபடி

தள்ளுபடி

சோனி, எச்டிசி நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் கருவிகளுக்கும் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. செல்பீ கேமராவிற்குப் பெயர்போன ஜியோனி எஸ்6எஸ் கருவியும் 12 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ரூ.15,891க்குக் கிடைக்கிறது.

பட்ஜெட் கருவிகள்

பட்ஜெட் கருவிகள்

லெனோவோ, எல்ஜி, பிளாக்பெரி, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கும் பேடிம் தளத்தில் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான லைஃப், மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன், இன்டெக்ஸ் போன்ற கருவிகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

விற்பனை தேதி

விற்பனை தேதி

பேடிஎம் சிறப்பு விற்பனை நவம்பர் 22 முதல் நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பேடிஎம் தளத்தில் அனைத்து பெரிய மின்சாதன கருவிகள், சமையலறை சாதனங்கள், உடை மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

லக்கி டிரா

லக்கி டிரா

பேடிஎம் வழங்கும் லக்கி டிரா போட்டியில் வெற்றி பெறும்
அனைவருக்கும் ரூ.2000/- பேடிஎம் பணம் வழங்கப்படுகிறது. பணத்தைப் பெற உங்களின் பேடிஎம் கணக்கில் லாக் இன் செய்வது அவசியம் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Paytm offers Rs 10,000 Cashback on iPhone 7, iPhone 6s
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot