Home
News

Paytm இல்ல.. இனிமே Axis பேங்க்.. பழசு காலி.. புது கேஓய்சி மாத்தணும்.. என்னென்ன வருது!

பேடிஎம் (Paytm) மீதான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அதன் யூசர்கள் வேறு வங்கிக்கு மாற வேண்டும் என்று ஆர்பிஐ (RBI) அறிவுறுத்தி இருந்தது. அதற்காக மார்ச் 15ஆம் தேதிக்கு கெடு விதிக்கப்பட்டிருந்த சூழலில் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) களத்தில் குதித்துள்ளது.

பேடிஎம் ஆப் (Paytm App) வைத்திருக்கும் யூசர்கள் சமீப காலமாக பரபரப்பாகவே இருந்து வருகின்றனர். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) அடுத்தடுத்த நடவடிக்கைகளை பார்த்தால், பேடிஎம் ஆப்பை மறந்துவிட வேண்டியதுதான் என்ற மனநிலைக்கே சென்று விட்டனர்.

Paytm இல்ல.. இனிமே Axis பேங்க்.. பழசு காலி.. புது கேஓய்சி மாத்தணும்!

அதே நேரத்தில் பேடிஎம் சேவைகளுக்கு புதிய காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மார்ச் 15ஆம் தேதிக்குள் பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) யூசர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஆக்சிஸ் பேங்க் புதிய நோடல் அக்கவுண்ட்டாக (Axis Bank Nodal Account) குதித்துள்ளது.

இதனால், பேடிஎம் யூசர்கள் பழைய கேஓய்சிகளை மறந்துவிட்டு புதிய அப்டேட் செய்யும் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து விட்டனர். அதாவது, பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) சேவைகளானது, மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகிவிடும். ஆகவே, அந்த பேங்க்குக்கு நோடல் அக்கவுண்ட்டாக ஆக்சிஸ் பேங்க் செயல்பட இருக்கிறது.

இந்த நோடல் அக்கவுண்ட்டானது, பணத்தை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் இடைத்தரகரை போல பயன்படுத்தி கொள்ளலாம். இது ஆர்பிஐயின் விதிகளுக்குட்பட்டது. ஆகவே, பேடிஎம் யூசர்கள் தங்களது சேவைகளை காலக்கெடுவுக்கு பிறகும் தொடர்ந்து பெற்று கொள்ள இது ஏற்பாடு செய்து கொடுக்கும். ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யும்போது கொடுக்கப்பட்ட கேஓய்சிகளை அப்படியே புதிதாக வேறொரு பேங்குக்கு அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். இப்படி செய்யவில்லையென்றால், பேடிஎம் சேவைகளை பெற முடியாது. ஆகவே, வரும் நாட்களில் பேடிஎம் யூசர்கள் கேஓய்சி அப்டேட்டுக்கு தயாராக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் கேஓய்சி அப்டேட் பணிகளை பேடிஎம் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த பணிகளை முடித்துவிட்டால், பேடிஎம் சேவைகளை வழக்கம்போல பயன்படுத்தி கொள்ளலாம். இப்போதைய சூழலுக்கு பேடிஎம்மின் நோடல் அக்கவுண்ட் முடிவானது, சரியானதாகவே இருக்கிறது. இந்த கேஓய்சிக்கு முன்பு பேடிஎம் யூசர்களுக்கு ஆர்பிஐ கொடுத்த அறிவுறுத்தல்களை தெரிந்து கொள்ளவோம்

பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்கள் தங்களது அக்கவுண்ட் பேலன்ஸை பெறலாம் அல்லது மாற்றலாம். டெபிட் மூலம் பரிவர்த்தை செய்யலாம். மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு சம்பளம் உள்ளிட்ட எந்தவித கிரெடிட் மற்றும் டெபாசிட்டுக்கு அனுமதி கிடையாது. மார்ச் 15ஆம் தேதி வரையில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தலாம்.

அந்த தேதிக்கு பிறகு வேறு வங்கிகள் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல பேடிஎம் கியூஆர் கோட், பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் ஆகியவற்றை மூலம் மார்ச் 15ஆம் தேதி வரையில் பயன்படுத்தலாம். அதன்பின் வேறு வங்கிகளுக்கு மாறினால் மட்டுமே பணத்தை பெற்ற கொள்ள முடியும்.

இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் மார்ச் 15ஆம் தேதியில் இருந்து பேடிஎம் யூசர்களுக்கு வருகிறது. எப்படி பார்த்தாலும், புதிய அக்கவுண்ட்டுக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆகவே, ஆக்சிஸ் பேங்க் நோடல் அக்கவுண்ட் விதிமுறைகளுக்கு அடுத்த சில நாட்களில் பேடிஎம் பேமெண்ட் பேங்க் யூசர்கள் கட்டுப்பட வேண்டி இருக்கும்.

Best Mobiles in India

English summary
Paytm Nodal Account Shift To Axis Bank Ahead RBI Guidelines Means New KYC Update For Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X