பேடிஎம் வழங்கும் மொபைல் ப்ரொடக்ஷ்ன் பிளான்: உங்க போனுக்கு கிடைக்குமா.?
பேடிஎம் தற்சமயம் கொண்டுவந்துள்ள பேடிஎம் மால் ஆஃபர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பு திட்டத்தை வழங்குகிறது.
தற்சமயம் பேடிஎம் மாலில் அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆஃபர் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது என பேடிஎம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் 2010ல் தொடங்கப்பட்ட இணைய வணிக நிறுவனமாகும், இது பல இணைய
வழி பணப்பரிவர்த்தனை செய்ய பயன் படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஒன் நைன் செவன் கம்யூனிகேஷன்ஸ் ஆல் நிறுவப்பட்டது.
பேடிஎம் சேவையில் இப்போது பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளது, மேலும் இந்தப் பேடிஎம் இன்பாக்ஸ் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும், அதன்பின்பு இந்த இக்பாக்ஸ் சேவையை 23 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் மால் ஆஃபர்:
பேடிஎம் தற்சமயம் கொண்டுவந்துள்ள பேடிஎம் மால் ஆஃபர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பு திட்டத்தை வழங்குகிறது, இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள்:
ஸ்மார்ட்போன் வாங்குவோர் தங்கள் சாதனங்களை பாதுகாக்க 12 மாதங்கள் 'மொபைல் பாதுகாப்பு திட்டம்' வழங்குவதாக பேடிஎம் மால் ஆஃபர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சேதம், திரவ சேதம், திருட்டு உட்பட அனைத்திற்க்கும்
இந்த மொபைல் பாதுகாப்பு திட்டம் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 சதவீதம்:
இந்ம பேடிஎம் மால் ஆஃபர் மூலம் ஆப்பிள், மோட்டோரோலா, விவோ, ஓப்போ, உள்ளடக்கிய அனைத்து மொபைல் பிராண்டுகளுக்கும் பொருந்தும். மொபைல் பாதுகாப்புத் திட்டம் ஸ்மார்ட்போன் விலையில் சுமார் 5 சதவீத
மதிப்பிற்குரிய விலையில் இந்த பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்த முடியும்.

18 வயது:
இதனைத் தவிர, 18 வயதிற்கு மேலாக இருக்கும் பேடிஎம் பயனர்களுக்கு, இந்தத் திட்டம் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம்:
(1-800-258-5956) -இந்த நம்பரின் மூலம் மொபைல் பாதுகாப்பிற்கான திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளமுடியும்.

அமிட் சின்ஹா:
பேடிஎம் மால் முதன்மை இயக்கு அலுவலர் அமிட் சின்ஹா தெரிவித்தது என்னவென்றால் இந்த திட்டம் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது, எனவே அனைத்து மக்களும் இந்த திட்டத்தை பயன்படுத்துவார்கள் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications