Just In
- 32 min ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- 22 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 1 day ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
Don't Miss
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- News
நீட் விபரீதம்.. 1311 முதுகலை மருத்துவ இடங்கள் வீண்.. மத்திய அரசுக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்
- Finance
சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்.. அதானி குழுமத்தில் எஸ்பிஐ, எல்ஐசி-ன் நிலை என்ன?
- Lifestyle
கக்கா போக முடியாம ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க... உடனே சரியாகிடுமாம்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கைக்குரிய திட்டம்: பேடிஎம்மில் அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய முதல் மொபைல் நிதி சேவைகள் தளமான பேடிஎம், தற்போது 'பேடிஎம்மின் நம்பிக்கைக்குரிய புள்ளிகளை' அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பேடிஎம்மில் உள்ள பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

இதன் துவக்கமாக, இந்தத் தளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் மீண்டும் பெறும் எல்லா தொகையும், 'பேடிஎம் நம்பிக்கைக்குரிய புள்ளிகள்' என்று சேர்த்து வைக்கப்படும். 5 மில்லியனுக்கும் மேலான விற்பனையகங்களால் பேடிஎம் ஏற்கப்படுவதால், இந்தப் புள்ளிகளை ஆன்லைன் தளங்களின் மூலம் பிறகு மீட்டு கொள்ளலாம்.
அடுத்த ஆண்டில் இந்தச் சலுகையில் இன்னும் அதிகளவிலான அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ள இந்நிறுவனம், தனது பேரளவிலான பயனர்களுக்கு வெகுமதி அளிப்பதோடு, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்கவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் பேடிஎம் ஆஃப்லைன் வணிக பங்காளிகளின் வியாபார வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். பேடிஎம்மின் பரந்து விரிந்த செயல்பாட்டின் மூலம் ரீசார்ஜ் மற்றும் பயன்பாடு கட்டணம் செலுத்துதல், திரைப்படம், விமானங்கள், பஸ் ஆகியவற்றின் டிக்கெட் முன்பதிவுகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பணம் செலுத்துவதற்கான முக்கிய ஆன்லைன் தளங்களில், இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
இது தவிர, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்நிறுவனத்தின் பேடிஎம் க்யூஆர் மூலம் லட்சக்கணக்கான ஆஃப்லைன் வணிகர்களால் பேடிஎம், யூபிஐ மற்றும் கார்டு பணம் செலுத்துதல் ஆகியவற்றில் இருந்து பணத்தை ஏற்று கொள்ளவும், எந்தக் கட்டணமும் இல்லாமல் தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தவும் ஏதுவாகிறது. இந்த பேடிஎம் நம்பிக்கைக்குரிய புள்ளிகளின் மூலம், மேற்கூறிய மொத்த சேவைகளையும் ஒன்றிணைக்க இந்தத் தளம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் பயனர்களால் வருமானத்தை ஈட்டவும், எங்கும் எப்போதும் அதை மீட்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் தனக்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று, தனது பேடிஎம் க்யூஆரை ஸ்கேன் செய்து, அவரது நம்பிக்கைக்குரிய புள்ளிகளை மீட்டு கொள்ளலாம்.
இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான தீபக் அப்பாட் கூறுகையில், "பணம் செலுத்துவதற்கு பெரும்பாலானோரால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தளமாக எங்களை மாற்றிய, லட்சக்கணக்கான எங்கள் பயனர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி செலுத்துகிறோம். இந்த பேடிஎம் நம்பிக்கைக்குரிய புள்ளிகளின் மூலம் பேடிஎம் அல்லது மற்ற முக்கிய ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் செய்யப்படும் பணப்பரிமாற்றம் ஆகியவை மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் வருமானத்தை ஈட்டவும் அதை மீட்கவும் கூடிய ஒரு சிறப்பான அனுபவம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பேடிஎம்மில் பணப்பரிமாற்றம் செய்வது மேலும் உற்சாகம் அளிக்கப்படுவதோடு, எங்கள் வணிக பங்காளிகளின் வணிக வளர்ச்சியை அளிக்கப்பதாகவும் அமையும்" என்றார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470