விரைவில் கிரெடிட் கார்ட்கள் வழங்கும் பேடிஎம்: புதுவித அனுபவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்!

|

முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளங்களில் ஒன்றாக இருக்கும் பேடிஎம் விரைவில் கிரெடிட் கார்ட் சேவைகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

விரைவில் கிரெடிட் கார்ட் சேவை

விரைவில் கிரெடிட் கார்ட் சேவை

முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளங்களில் ஒன்றாக இருக்கும் பேடிஎம் விரைவில் கிரெடிட் கார்ட் சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பேடிஎம் கோ பிராடண்டட் கார்டுகளை அறிமுகம் செய்ய பல்வேறு கார்டு வழங்குனர்களுடன் கூட்டு சேர உள்ளதாக கூறப்படுகிறது.

12-18 மாதங்களுக்குள் 20 லட்சம் கார்டுகள்

12-18 மாதங்களுக்குள் 20 லட்சம் கார்டுகள்

பேடிஎம் அடுத்த 12-18 மாதங்களுக்குள் 20 லட்சம் கார்டுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பேடிஎம் தனது செயலியில் புதுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்க நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் கடன் பரிவர்த்தனை

டிஜிட்டல் முறையில் கடன் பரிவர்த்தனை

புதிய கடன் பயனர்களை டிஜிட்டல் முறையில் தங்களது கடன் பரிவர்த்தனையை மேற்கொள்ள வைப்பதே நிறுவனத்தின் நோக்கமாகும். பயனர்கள் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த செலவுகளையும் செயலி மூலமாக நிர்வகிக்கலாம்.

பேடிஎம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை

பேடிஎம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து பேடிஎம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் கிரெடிட் கார்டுகளை எளிதில் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம். கிரெடிட் கார்டுகளில் பின் எண்ணை மாற்றுவது, இருப்பிட முகவரி புதிப்பிப்பது, சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனையின் போது கார்ட்டை இருந்த இடத்தில் இருந்தே செயலியின் மூலம் பிளாக் செய்வது, கிரெடிட் கார்ட் லிமிட்டை பிளாக் பார்ப்போது போன்ற அனைத்து பரிவர்த்தனையும் ஒன்டச் மூலம் மேற்கொள்ளும்படியான அம்சங்கள் வழங்கப்படும்.

பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!

கிரெடிட் கார்ட் மோசடிகள்

கிரெடிட் கார்ட் மோசடிகள்

சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது தொடர்பில்லா கொடுப்பனவுகள் தேவையில்லாத போது அதை ஆஃப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். கிரெடிட் கார்ட் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான அம்சங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுமையான டிஜிட்டல் அனுபவம்

புதுமையான டிஜிட்டல் அனுபவம்

பேடிஎம் தனது பயன்பாட்டில் ஒரு புதுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது. இது பயனர்கள் தங்கள் ஒட்டுமொத்த செலவுகளைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.

எதன் அடிப்படையில் கிரெடிட்கார்ட்கள் வழங்கப்படும்

எதன் அடிப்படையில் கிரெடிட்கார்ட்கள் வழங்கப்படும்

சிபில் ஸ்கோர் மற்றும் பேடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை முறை ஆகியவற்றின் அடிப்படையில் கிரெடிட் கார்ட்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேடிஎம் இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் கிரெடிட் கார்ட் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: indiatoday.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm Launches Credit Cards With Various Security Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X