Home
News

Google Pay, PhonePe கடைய சாத்துங்க.. இனி ஒவ்வொரு முறையும் 90 நாட்களுக்கு கிடைக்கும்.. Paytm-ல் புதிய UPI வசதி!

ஆர்பிஐ (RBI) அறிவித்த தடை மற்றும் கட்டுப்பாடுகளால் சுருண்டு சுண்ணாம்பாக போன பேடிஎம் (Paytm) நிறுவனத்திற்கு, கடந்த அக்டோபர் மாத இறுதியில் புத்துயிர் கிடைத்தது. பேடிஎம் ஆப் ஆனது பழையபடி புதிய யுபிஐ பயனர்களை சேர்க்கலாம் என்கிற அனுமதியை என்பிசிஐ (NCPI - National Payments Corporation of India) வழங்கியது.

அனுமதி கொடுக்கப்பட்ட வேகத்தில், இழந்த பயனர்களை மீண்டும் சேர்க்கும் நோக்கத்தின் கீழ் பேடிஎம் நிறுவனமானது அதன் ஆப்பில் யுபிஐ ஸ்டேட்மென்ட் டவுன்லோட் (UPI Statement Download) என்கிற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது யுபிஐ இன்டர்நேஷனல் (UPI International) என்கிற மற்றொரு புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுபிஐ இன்டர்நேஷனல் என்றால் என்ன? இதனால் என்ன பயன்? இதை ஆக்டிவேட் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

ஒவ்வொரு முறையும் 90 நாட்களுக்கு கிடைக்கும்.. Paytm-ல் புதிய UPI வசதி!

பேடிஎம் யுபிஐ இன்டர்நேஷனல் என்றால் என்ன? இது இந்திய பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய இடங்களில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியாகும். இதன்கீழ் யுஏஇ, பிரான்ஸ், மொரிஷியஸ், சிங்கப்பூர், பூட்டான் மற்றும் நேபாளத்தில் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம்.

பேடிஎம் யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி? பேடிஎம் ஆப்பில் இந்த வசதி டீபால்ட் ஆகவே, அதாவது இயல்பாகவே முடக்கப்பட்டு இருக்கும். இந்த வசதியை பயன்படுத்த விரும்புபவர்கள், தங்கள் பேங்க் அக்கவுண்ட்டை இணைக்க மிகவும் எளிமையான ஒன்-டைம் ஆக்டிவேஷனை (One-time Activation) செய்ய வேண்டி இருக்கும்.

ஒருவேளை இந்த யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை கைமுறையாக செய்ய நினைத்தால், பேடிஎம் ஆப்பிற்குள் சென்று மேலே உள்ள சேர்ச் பாரில் "International UPI" என்று டைப் செய்து தேடவும். பின்னர் சர்வீசஸ் டேப்பின் (Services Tab) கீழ் கிடைக்கும் ரிசல்ட்டை கிளிக் செய்யவும். இப்போது ஸ்க்ரீனில், இந்தியாவிற்கு வெளியே பணம் செலுத்த உங்கள் Uயுபிஐ ஐடியை இணைக்குமாறு பேடிஎம் கேட்கும்; அதை ஏற்றுக்கொள்ளவும்.

பேடிஎம் ஆப்பின் இந்த யுபிஐ இன்டர்நேஷனல் வசதிடீயின் கீழ், உங்களுடைய வெளிநாட்டு பயண காலத்தை பொறுத்து, 1 நாள் முதல் 90 நாட்கள் வரையிலான பயன்பாட்டு காலத்தைத் தேர்வுசெய்ய முடியும். அதன் பிறகு பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த சேவை முடக்கப்படும் என்று பேடிஎம் நிறுவனம் கூறுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு (அதாவது யுபிஐ இன்டர்நேஷனல் வசதியை நீங்கள் எதனை நாட்களுக்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தேர்வு செய்துள்ள காலத்திற்கு பிறகு) யுபிஐ இன்டர்நேஷனல் செயல்பாட்டை தானாகவே முடக்கும் நடவடிக்கையானது, தற்செயலான பரிவர்த்தனைகளை தடுப்பது மட்டுமல்லாமல், மோசடி செய்பவர்களிடம் இருந்தும் உங்கள் பணத்தை காப்பாற்றும் என்றும் பேடிஎம் நம்புகிறது.

இதற்கு முன்பாக பேடிஎம் ஆப்பில் அறிமுகமமான யுபிஐ ஸ்டேட்மென்ட் டவுன்லோட் வசதியை பொறுத்தவரை, இதன் கீழ் பயனர்கள் தங்கள் யுபிஐ பரிவர்த்தனை ஸ்டேட்மென்ட்கைகளை நேரடியாக பேடிஎம் ஆப்பில் இலிருந்து பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த வசதி - பயனர்கள் தத்தம் செலவுகளை கண்காணிப்பது, வரவு செலவு திட்டங்களை நிர்வகிப்பது மற்றும் வரி தாக்கல் செய்வதற்கு தயாராவதை எளிதாக்கும் என்று பேடிஎம் கூறுகிறது.

இது தவிர்த்து சிறிய பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ லைட் (UPI Lite) சேவை, தொடர்ச்சியான பில் பேமண்ட்களுக்கான ஆட்டோ பே (Auto-pay for recurring bill payments) போன்ற அம்சங்களையும் பேடிஎம் ஆப் கொண்டுள்ளது. அதாவது தடை விதிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சந்தைக்கு வந்து இருந்தாலும் கூட, பேடிஎம் ஆப் ஆனது, கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற போட்டியாளர்களுக்கு சமமாக மிகவும் அப்டேட் ஆக உள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm Launched UPI International With Up to 90 Days Duration How to Activate Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X