Paytm நிறுவனத்தில் 1000 பேருக்கு நிச்சய வேலை! Paytm ஆப்ஸ் கீழ் உள்ள குழுவிலும் வேலை உள்ளது!

|

Paytm நிறுவனம் 1000 பேரை வேலைக்கு அமர்த்துவதாக தற்பொழுது அறிவித்துள்ளது. பேடியம் நிறுவனம் 50 பேரை துணைத் தலைவர் பதவியில் அல்லது அதற்குச் சமமான பதவியில் அமர்த்தும் என்று நிறுவனம் தற்பொழுது கூறியுள்ளது. 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதற்கான செயல்முறை நடந்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

இந்த புதிய வேலைவாய்ப்பு பல்வேறு பிரிவுகளில் வணிக விரிவாக்கத்தை வழங்குவதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த சில மாதங்களில், பொறியாளர், டேட்டா சைன்ஸ், பினான்சியல் அனலிஸ்ட் மற்றும் பிற ஐடி மற்றும் ஐடி அல்லாத வேலைகளுக்குத் தேவையான பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளதாக பேடியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணியிடங்களில் ஊழியர்களை

பேடியம் நிறுவனம் தனது நிதி மற்றும் சொத்து மேலாண்மை சேவையை விரைவாக விரிவுபடுத்துவதாகவும், அதற்கான தேவைப்படும் காலியான பணியிடங்களில் ஊழியர்களை வேலைக்கு நிறுவவும் திட்டமிட்டுள்ளது, எனவே இது நிறுவனத்தில் நியமனங்களின் வேகத்தை அதிகரித்துள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேடியம், அதன் குழு நிறுவனங்களையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இவ்ளோ வருஷமா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!இவ்ளோ வருஷமா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!

சொத்து மேலாண்மை

பேடியம் அதன் குழு நிறுவனங்கள் கடன்கள், காப்பீடு, சொத்து மேலாண்மை மற்றும் ஆஃப்லைன் கொடுப்பனவுகள் போன்ற துறைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதை விரைவாகச் செய்து முடிக்க அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கடந்த 4 மாதங்களில்

கடந்த ஏப்ரல் மாதத்தில் பேடியம் நிறுவனம் சுமார் 500 புதிய ஊழியர்களைத் தனது நிறுவனத்துடன் சேர்த்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 4 மாதங்களில் இதுவரை சுமார் 700 புதிய ஊழியர்களை காலி பணியிடங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. புதிதாக வேலை வாய்ப்பு தேடுபவர்கள் பேடியம் டிஜிட்டல் தளத்தை அணுகலாம்.

Best Mobiles in India

English summary
Paytm is offering new jobs in it's company 1000 plus sure recruitment designations : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X