திடீரென UPI ஐடியில் வந்த புதிய வசதி.. இனி மொபைல் நம்பர் தேவையில்லை.. உற்சாகத்தில் பயனர்கள்! இதோ முழு விவரம்..
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகைக் கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றர். இந்நிலையில் பேடிஎம் (Paytm) செயலில் ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது பேடிஎம் தற்போது கொண்டுவந்துள்ளது புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான யுபிஐ ஐடியை (UPI ids) உருவாக்க முடியும். குறிப்பாக இந்த புதிய வசதியின் மூலம் மொபைலல் நம்பர் வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்றே கூறலாம்.

தற்போது நாம் UPI ஐடியை பயன்படுத்தும்போது மொபைல் எண் மூலம் பணம் செலுத்துகிறோம். அதேபோல் நாம் பணம் அனுப்பும் நபர்களால் நம்முடைய மொபைல் நம்பரை எளிமையாகப் பார்க்க முடியும். ஆனால் இப்போது பலர் தங்கள் தனிப்பட்ட தகவல்களில் எச்சரிக்கையாக உள்ளனர். அதாவது மொபைல் நம்பர் வெளிப்படுத்த வேண்டாம் என நினைப்பார்கள். இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் பேடிஎம் நிறுவனம் இந்த தனிப்பயனாக்கப்பட்ட UPI ஐடி வசதியை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இப்போது கொண்டுவந்துள்ள புதிய வசதி மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த பெயர் அல்லது வார்த்தைகளுடன் ஒரு தனித்துவமான ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் prakash@ptaxis அல்லது Nithya@ptyes போன்று உங்களுக்கு விருப்பமான ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தங்கள் மொபைல் எண்ணைப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.
அதேபோல் தெரியாத நபர்களுக்குப் பணம் அனுப்பினாலோ அல்லது ஷாப்பிங் செய்தாலோ இனி நம்முடைய தனிப்பட்ட ஐடியை மட்டும் நாம் பயன்படுத்தினால் போதும். அதுவும் தங்களுடைய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேடிஎம் நிறுவனம் இந்த புதிய நடவடிக்கையைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நமது மொபைல் நம்பரை ரகசியமாக வைத்திருப்பது எளிதாகிவிட்டது.
ஆனாலும் தற்போது ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி ஆகிய ஆகிய வங்கிகளால் ஆதரிக்கப்படும் UPI ஐடிகளில் பேடிஎம் நிறுவனம் இந்த வசதியை செயல்படுத்தியுள்ளது. விரைவில் மற்ற வங்கிகளிலும் இந்த வசதி கொண்டுவரப்பட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. சரி இப்போது இந்த UPI ஐடியை உருவாக்கும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் பேடிஎம் செயலியை ஓபன் செய்யவும்.
வழிமுறை-2: அடுத்து உங்கள் Profile ஐகான் தேர்வு செய்து UPI Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அதன்பின்பு Manage UPI ID கிளிக் செய்து தனிப்பயனாக்கப்பட்ட ஐடியைத் தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக: name@ptyes
வழிமுறை-4: பணம் செலுத்துவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடியை உறுதிசெய்து செயல்படுத்த வேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் பேடிஎம் செயலி ஆனது பரவலான அளவில் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது கேஷ் பேக் சலுகைகளையும் வழங்குகிறது. பின்பு தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








