அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?

|

கொரோனா பாதிப்பு காலங்களில் முதியவர்களுக்கு உதவும் வகையில் பணத்தை நேரில் சென்று அளிக்கும் டெலிவரி திட்டத்தை பேடிஎம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவு

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவு

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதி

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதி

அதேபோல் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. ஏணைய தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பரிசோதனைகள் அதிகரிக்க நோயப் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

85,940  பேர் கொரோனாவால் பாதிப்பு

85,940 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் மொத்தம் 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளாகவும் அதேபோல் இதுவரை 30153 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய திட்டம் அறிமுகம்

புதிய திட்டம் அறிமுகம்

இந்த நிலையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் பேடிஎம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பேடிஎம் வங்கியில் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் மூத்தக் குடிமகன்களும் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான பணம் பெற 'Cash at Home' என்ற திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 Cash at Home என்ற திட்டம்

Cash at Home என்ற திட்டம்

இந்த திட்டம் குறித்து பேடிஎம் வெளியிட்டுள்ள விளக்கும் பார்க்கையில், Cash at Home என்ற திட்டதத்தில் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த அடுத்த இரண்டு நாள்களில் பணம் அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 முதல் ரூ.5000 வரை

ரூ.1000 முதல் ரூ.5000 வரை

இந்த வசதியைப் பயன்படுத்தி ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Direct Benefits Transfer

Direct Benefits Transfer

முன்னதாக 400க்கும் மேற்பட்ட அரசு மானியங்களைப் பொதுமக்கள் Direct Benefits Transfer வாயிலாக தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதியை சில மாதங்களுக்கு முன் பேடிஎம் அறிமுகம் செய்திருந்தது.

பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார் குப்தா கூறுகையில், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் வங்கி சேவையை நாட்டில் தொடர்ந்து விரிவுபடுத்துவோம். எங்களின் புதிய 'Cash at Home' திட்டத்தின் மூலம் வயதானவர்களும் உடல்நலமற்றவர்களும் தங்களுக்கு தேவையான பணத்தை பெற்று வீட்டில் இருந்த பயன்பெறலாம் என கூறினார்.

600 கோடி ரூபாயைத் தாண்டியது

600 கோடி ரூபாயைத் தாண்டியது

Paytm Payments Bank Ltd (PPBL) தனது பங்குதாரர் IndusInd வங்கியில் வைத்திருக்கும் நிலையான வைப்புக் கணக்குகளில் 600 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது ஆண்டுக்கு 7 சதவீதம் வரை சம்பாதிக்க அனுமதிக்கிறது. இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்கு ஆதரவாகக பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. Paytm பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் (PPB) சேமிப்பு கணக்கை வைத்திருக்கும் முதியவர்கள் ரூ.1000 முதல் ரூ.5000 வரை வீட்டிற்கே வந்து கோரிக்கையின்படி வழங்கப்படும்.

source: india.com

Best Mobiles in India

English summary
paytm introduced cash at home plan to support senior citizens

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X