ஏத்திவிட்ட Paytm.. ரூ.1,000-க்கு 10 கோல்டு காயின்கள்.. மொத்த காசுக்கும் கோல்டு.. வாரி குவியுது UPI பேமெண்ட்!
பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பேடிஎம் கோல்டு காயின்ஸ் ப்ரோக்ராம் (Paytm Gold Coins Program) ஆனது 1000 ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு ஒரு கோல்டு காயின் கொடுக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை மற்றும் க்யூஆர் ஸ்கேன் பரிவர்த்தனைகளுக்கு இந்த கோல்டு காயின்ஸ் கொடுக்கப்படுகிறது.
இந்த கோல்டு காயின்களை பயன்படுத்தி 24 கேரட் கோல்டு பேடிஎம் கஸ்டமர்களின் பேரில் வரவு வைத்துகொள்ளலாம். இது டிஜிட்டல் கோல்டாக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ரிவார்ட் ப்ரோக்ராம் போல கொடுக்கப்படுவதால் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். கேஷ் பேக் போல அல்லாமல் நேரடியாக டிஜிட்டல் கோல்டு இதில் கிடைக்கிறது.

பேடிஎம் நிறுவனம் இதற்காக சில தகுதிகளை வகுத்துள்ளது. பேடிஎம் கஸ்டமர்களிடம் இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே, கோல்டு காயின்ஸ் ப்ரோக்ராம் மூலம் டிஜிட்டல் கோல்டை பெற முடியும்.
1. உங்களிடம் பேடிஎம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். கோல்டு காயின்களை பெறுவதற்கு தனி அக்கவுண்ட் தேவையில்லை.
2. உங்களுக்கு 18 வயதிற்கு மேல் ஆகி இருக்க வேண்டும்.
3. இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்த டிஜிட்டல் கோல்டு சலுகை கொடுக்கப்படும்.
மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் ஷாப்பிங், யுபிஐ டிரான்ஸ்பர், ஸ்கேன் & பே போன்ற பரிவர்த்தனைகளில் ரூ.1,000 பரிமாற்றம் செய்தால் உங்களுக்கு 10 கோல்டு காயின்கள் கொடுக்கப்படும். ரூபே கிரெடிட் கார்டு (RuPay Credit Card) வாயிலாக செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (ரூ.1,000 பரிமாற்றம்) 20 கோல்டு காயின்கள் கொடுக்கப்படும்.
இந்த கோல்டு காயின்கள் ஒரு ரிவார்ட் பாயிண்ட் போலத்தான். டிஜிட்டல் கோல்டு கிடையாது. ஆனால், இதை வைத்து தான் டிஜிட்டல் கோல்டு வாங்க முடியும். 100 கோல்டு காயின்களை சேர்த்தால் அதை டிஜிட்டல் கோல்டாக மாற்றி கொள்ளலாம். அதாவது 100 கோல்டு காயின்களை ரூ.1 மதிப்புள்ள டிஜிட்டல் கோல்டாக மாற்றிக் கொள்ளலாம்.
இது குறைவான டிஜிட்டல் கோல்டு போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நீங்கள் மாதத்தில் ரூ.50,000 மேல் பரிவர்த்தனைகளை செய்தால், அதிகமாக டிஜிட்டல் கோல்டு வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே, இதை ஒரு இன்வெஸ்ட்மென்ட் போல, பேடிஎம் கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது 24 கேரட் மதிப்புள்ள கோல்டின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, அந்த கோல்டின் விலை ஏறினால், பேடிஎம் கஸ்டமர்களுக்கு லாபமும் அதிகமாக கிடைக்கும். இப்படி நீங்கள் சேமித்து வைக்கும் டிஜிட்டல் கோல்டு எம்எம்டிசி-பிஏஎம்பி (MMTC-PAMP) மூலமாக உங்களது பெயரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இதற்கு சில குறிப்பிட்ட விதிகளையும் பேடிஎம் நிறுவனம் வைத்திருக்கிறது.
குறைந்தபட்சம் 1500 கோல்டு காயின்களை சேகரித்தால் மட்டுமே, அதை டிஜிட்டல் கோல்டாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த கோல்டு காயின்களுக்கு 12 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். அதற்குள் அதை டிஜிட்டல் கோல்டாக மாற்றவில்லை என்றால், அது காலாவதியாகி விடும். அதேபோல கோல்டு காயின்களை எவ்வளவு சேகரிக்க முடியும் என்பதற்கும் லிமிட் இருக்கிறது.
யுபிஐ பேமெண்ட்கள் (UPI Payments) மூலம் ஒரு நாளைக்கு 6000 கோல்டு காயின்களை சேகரிக்க முடியும். அதேபோல ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் கோல்டு காயின்களை சேகரித்துக் கொள்ளலாம். மேலும் பி2பி (P2P) பரிவர்த்தனைகளில் ஒரு நாளுக்கு 10 பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கோல்டு காயின்கள் கொடுக்கப்படும். அதேபோல மாதத்துக்கு 100 பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஆகவே, ஸ்கேன் & பே மூலமாக வழக்கமாக செய்யும் பரிவர்த்தனைகள், மொபைல் நம்பர் மூலம் நேரடியாக செய்யப்படும் பரிவர்த்தனைகள், பில் பேமெண்ட்கள், மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றின் போது உங்களுக்கு கிடைக்கும் கோல்டு காயின்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை 12 மாதங்களுக்குள் டிஜிட்டல் கோல்டாக மாற்றிக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








