Home
News

பேடிஎம் யூசர்களுக்கு ஆகஸ்ட் 10 கடைசி தேதி.. டிக்கெட் புக்கிங்கை தள்ளிப் போடாதீங்க.. அதிரடி அறிவிப்பு!

பேடிஎம் (Paytm) நிறுவனமானது, ஃபிரீடம் டிராவல் கார்னிவல் (Freedom Travel Carnival) சலுகை நாட்களை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை விமானம், ரயில், பஸ் பயணங்களுக்கு பேடிஎம் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்தால், அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பேடிஎம் விமான டிக்கெட் தள்ளுபடி (Paytm Discount on Flight Tickets): இந்த பேடிஎம் ஃபிரீடம் டிராவல் கார்னிவல் மூலம், ஆகஸ்ட் 10 தேதி வரை நீங்கள் விமான டிக்கெட் புக் செய்தால், உள்நாட்டு பயணங்களுக்கு 15 சதவீத தள்ளுபடியும், வெளிநாட்டு பயணங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.

பேடிஎம் யூசர்கள் டிக்கெட் புக்கிங்கை தள்ளி போடாதீங்க! ஏன் தெரியுமா?

இந்த தள்ளுபடியை நீங்கள் ஆர்பிஎல் பேங்க் (RBL Bank ) மற்றும் ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) மூலம் மட்டுமே பெற முடியும். இருப்பினும், உள்நாட்டு பயணங்களுக்கு பேடிஎம் வாலெட் மற்றும் பேடிஎம் போஸ்ட்பெய்ட் மூலம் டிக்கெட் புக் செய்தால் 13 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இண்டிகோ (IndiGo), விஸ்தாரா (Vistara), ஸ்பைஸ்ஜெட் (SpiceJet), ஏர் ஏசியா (Air Asia), ஆகாசா ஏர் (Akasa Air) மற்றும் ஏர் இந்தியா (Air India) போன்ற முன்னணி ஏர்லைன்ஸ்களில் இந்த தள்ளுபடி செல்லுபடியாகும். அதோடு சீனியர் சிட்டிசன் மற்றும் மாணவர்களுக்கு வசதி கட்டணம் (Convenience Fee) வசூலிக்கப்படாது.

பேடிஎம் பஸ் டிக்கெட் தள்ளுபடி (Paytm Discount on Bus Tickets): நீங்கள் பேடிஎம் ஆப் மூலம், ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை பஸ் டிக்கெட் புக் செய்தால் உங்களுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடிக்கு நீங்கள் (CRAZYSALE) டிஸ்கவுண்ட் கோடை பயன்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், மேலும் 20 சதவீத தள்ளுபடி குறிப்பிட்ட பஸ் ஆப்ரேட்டரகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனை, உங்களது பேடிஎம் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் நாடு முழுவதும் உள்ள 2,500க்கும் மேற்பட்ட பஸ் ஆப்ரேட்டர்களுக்கு பொருந்தும். அதோடு அந்த ஆப்ரேட்டர்கள் வழங்கும் தள்ளுபடியையும் பெறலாம்.

பேடிஎம் ரயில் டிக்கெட் தள்ளுபடி (Paytm Discount on Train Tickets): இந்த டிஸ்கவுண்ட் மூலம் நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்தால், எக்ஸ்ட்ரா சார்ஜ் செலுத்த வேண்டியதில்லை. டிக்கெட்டுக்கான கட்டணத்தை மட்டுமே கொடுத்தால் போதும். அதோடு பேடிஎம் ஆப் மூலம் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், ரயில் டிராக்கிங், 24/7 கஸ்டமர் சப்போர்ட் போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், விமானம், ரயில், பஸ் என்று எந்த பயணத்துக்கும் நீங்கள் டிக்கெட் புக் செய்தாலும், அதற்கு 100 சதவீதம் ரீ-பண்ட் வழங்கப்படுகிறது. இது பேடிஎம் ப்ரீ கேன்சலேஷன் பாலிசியின் (Paytm Free Cancellation Policy) அடிப்படையில் ரீ-பண்ட் செய்யப்படுவதாகும். இதில் எதற்கும் வசதி கட்டணம், கூடுதல் கட்டணம் என்று மறைமுகமாக எதுவும் வசூலிக்கப்படாது.

இந்த ஆஃபரை எப்படி பெறுவது? முதலில் உங்களது பேடிஎம் ஆப்பை ஓப்பன் செய்து, அதில் டிராவல் புக்கிங் (Travel Bookings) என்னும் டேபுக்கு செல்லுங்கள். அதில், விமானம், பஸ், ரயில் ஆகியவற்றின் லோகோ தோன்றும். அதில், நீங்கள் புக் செய்ய விரும்பும் பயண முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதன்பின் வழக்கம் போல எங்கு செல்கிறீர்கள், எந்த தேதியில் செல்கிறீர்கள் என்பதை தேர்வு செய்து விட்டு, இறுதியாக பணம் செலுத்தும் போது, பேடிஎம் யுபிஐ, பேடிஎம் வாலெட், நெட் பேங்கிங்க், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற எந்த பணப் பரிவர்த்தனை முறையை தேர்வு செய்தாலும் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இந்த ஆஃபர் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm Freedom Travel Carnival Discount On Flights, Trains And Buses Tickets till August 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X