Home
News

Customer Care வேலையையும் விட்டுவைக்காத AI.. பேடிஎம் நிறுவனர் எடுத்த முடிவு!

ஏஐ (AI) வருகையால் பல்வேறு மனித வேலைகளும், புதிய வேலை வாய்ப்புகளும் பறிபோகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேடிஎம் (Paytm) நிறுவனர் விஜய் சேகர் சர்மா (Vijay Shekhar Sharma) தங்களது நிறுவனத்தில் கஸ்டமர் கேர் (Customer Care) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது, தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்ல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தனது ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டது. அதற்கேற்ப தொழில்நுட்ப நிறுவனங்களும் மனித வேலைகளை குறைத்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.

Customer Care வேலையையும் விட்டுவைக்காத AI.. பேடிஎம் அதிரடி முடிவு!

இந்த செயற்கை நுண்ணறிவு, அடுத்த சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்றும், பல்வேறு வேலைகளையே முற்றிலும் ஒழிக்கும் என்றும் முன்னணி நிர்வாக மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் மெக்கின்ஸி (McKinsey) நிறுவனம் நடத்தி ஆய்வில், 2030 ஆம் ஆண்டுக்குள் 80 கோடி மனித வேலை வாய்ப்புகள் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக பறிபோகும் என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே, ஏஐ காரணமாக தொழில்நுட்பத்துறையில் ஒருபுறம் புரட்சியும், மறுபுறம் வேலை வாய்ப்பின்மையும் (Unemployment) அதிகரிக்கும் என்பதை அறிந்தகொள்ள முடிகிறது. இந்ந நிலையில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, தங்களது நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாக அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய் சேகர் சர்மா, அதன்பின் இந்த முடிவை அறிவித்தார்.

அப்போது அவர், பேடிஎம் நிறுவனத்தின் ஃபிராடு டிடெக்ஷன் (Fraud Detection) கஸ்மர் கேர் (Customer Care) மற்றும் கஸ்டமர் ஆன்போர்டிங் (Customer Onboarding) செக்ஷன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் பல வேலைகளை மிகவும் சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிதிநிலைமையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்தார்.

இவரது முடிவு பேடிஎம் நிறுவனத்துக்கு லாபத்தை கொண்டுவரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்றாலும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் செக்ஷன்களில் ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்களின் வேலை என்னவாகும் என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.

ஒருவேலை இந்த நிறுவனத்தில் ஏஐ வந்தாலும் கூட யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், இனிமேல் ஃபிராடு டிடெக்ஷன் (Fraud Detection) கஸ்மர் கேர் (Customer Care) மற்றும் கஸ்டமர் ஆன்போர்டிங் (Customer Onboarding) துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா என்பது சந்தேகமே.

ஏற்கனவே, ஏஐ தொழில்நுட்பம் காரணமாக, டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry), காசாளர் (cashier), கணக்கேடுகள் பராமரிப்பாளர் (Bookkeeping), ஸ்டாட்டிகல்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கிளார்க் (Statistics Finance and Insurance Clerk) உள்ளிட்ட முக்கியமான வேலைகள் அழியும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அந்த வரிசையில் கஸ்மர் கேர் எக்சிகியூட்டிவ் வேலையும் சேர்ந்துள்ளதாகவே தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm Founder Vijay Shekhar Sharma says AI do Humans Work and Company to use AI for Fraud Detection and Customer Care
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X