Paytm நிறுவனர் சொன்ன குட் நியூஸ்.. இந்த 3 வசதிகளும் வழக்கம் போல கிடைக்கும்.. மார்ச் 15-க்கு பின்பும் கூட!
பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பல சேவைகள் வருகிற மார்ச் 15 ஆம் தேதிக்கு பின்னர் நிறுத்தப்படவுள்ள நிலைப்பாட்டில், பேடிஎம் நிறுவனரான விஜய் சேகர் ஷர்மா சூப்பரான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதென்ன தகவல்? மார்ச் 15-க்கு பின்பும் கூட என்னென்ன பேடிஎம் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும்?
மார்ச் 15 ஆம் தேத்திக்கு பின்னர்அமலுக்கு வரும் புதிய ஆர்பிஐ கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்படும் என்று பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான விஜய் சேகர் சர்மா ( Vijay Shekhar Sharma) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ட்வீட்டில், "பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் இடிசி கார்டு மெஷின் (EDC Card Machine) வசதிகளானது மார்ச் 15 க்கு பிறகும் கூட, எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். புள்ளி #21-இல் ஆர்பிஐ வழங்கிய சமீபத்திய FAQ-வில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம்!" என்று விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.
மார்ச் 15-க்கு பின்னர் பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் வேலை செய்யாது என்கிற வதந்திகளையும், தவறான தகவல்களையும் தடுக்க பேடிஎம் நிறுவனம் வெளியிட்ட விளம்பரமும் கூட, விஜய் சேகர் சர்மாவின் ட்வீட்டில் சேர்க்கப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில், பேடிஎம் டிவைஸ்கள் மற்றும் க்யூர் கோட் ஆனது தொடர்ந்து செயல்படும். இன்றும், நாளையும், எப்போதும்!" என்கிற வாசகத்தை காண முடிகிறது.

ஆனால் பேடிஎம் ஃபாஸ்டாக் (Paytm FASTag) விஷயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலில் எந்த மாற்றமும் இருக்காது. பேடிஎம் ஃபாஸ்டாக்-ஐ கொண்டுள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பயனர்கள் அதை க்ளோஸ் அல்லது டிஆக்டிவேட் செய்துவிட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் வழியாக புதிய ஃபாஸ்டேக்கை பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் சேவைகள் மீதான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக இதற்கான கெடு நாள் பிப்ரவரி 29 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது மார்ச் 15 ஆக மாற்றப்பட்டது.

இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் திடீர் வீழ்ச்சியின் காரணமாக யுபிஐ கட்டண சந்தையில் (UPI Payment Market) கூகுள் பே மற்றும் போன்பே நிறுவனங்களின் அதீத ஆதிக்கம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அதை தடுக்க இந்திய அரசாங்கம் புதிய உத்திகளை மற்றும் திட்டங்களை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆகிய இரு நிறுவனங்களும் யுபிஐ கட்டண சந்தை பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் வைத்துள்ளனர். இதன் விளைவாக யுபிஐ சந்தையில் டூயாபோலி (Duopoly) உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டூயாபோலி என்றால் ஒரு குறிப்பிட்ட சந்தையில் இரண்டு சப்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையாகும்.
இந்த சிக்கல் பூதாகாரமானதாக உருமாறும் முன்னர், யூபிஐ கட்டண சேவைகளில் 30 சதவீத கேப்பிங் முறையை (30% Capping System) செயல்படுத்தும் புதிய திட்டத்தை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஒரு யுபிஐ கட்டண சேவையின் சந்தை பங்கை 30% ஆக கட்டுப்படுத்துவதன் மூலம் கூகுள் பே மற்றும் போன்பேவின் "தேவையற்ற" ஆதிக்கங்கள் தடுக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) நம்புகிறது.


Click it and Unblock the Notifications