சோதனை மேல் சோதனை.. புது FASTag ஸ்டிக்கர் வாங்க சொல்லி திடீர் உத்தரவு.. கேப் விடாம அடிக்கும் அரசாங்கம்!
பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) மீதான ஆர்பிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தொடர்ந்து, பேடிஎம் பயனர்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. இதனொரு பகுதியாக பேடிஎம் ஃபாஸ்டாக்கை (Paytm FASTag) கொண்டுள்ளவர்களுக்கு ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 15 ஆம் தேதிக்குள் பேடிஎம் ஃபாஸ்டாக்-ஐ கொண்டுள்ளவர்கள் அதை க்ளோஸ் அல்லது டிஆக்டிவேட் (Close Or Deactivate) செய்துவிட்டு.. அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் வழியாக புதிய ஃபாஸ்டேக்கை பெறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India - NHAI) அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள பேடிஎம் ஃபாஸ்டாக் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸை 2024 மார்ச் 15 ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்; அதன் பிறகு எந்த டாப்-அப்களும் அனுமதிக்கப்படாது என்பதால் அனைத்து பேடிஎம் ஃபாஸ்டாக் பயனர்களும் புதிய ஃபாஸ்டாக்கை வாங்கும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருவேளை உங்களுக்கு பேடிஎம் ஃபாஸ்டாக்கை செயலிழக்க செய்வது எப்படி? ஆன்லைன் வழியாக உங்கள் ஃபாஸ்டாக்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? ஆன்லைன் வழியாக உங்கள் ஃபாஸ்டாக்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? எந்தெந்த வங்கிகளின் வழியாக புதிய ஃபாஸ்டாக்-ஐ வாங்கலாம்? என்பதில் குழப்பம் இருந்தால்.. இதோ அதற்கான பதில்கள்:

பேடிஎம் ஃபாஸ்டாக்கை செயலிழக்க செய்வது எப்படி? 1800-120-4210 என்கிற எண்ணிற்கு டயல் செய்து, உங்களுடைய ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பர் (Registered mobile number) மற்றும் வாகன பதிவு எண் (Vehicle Registration Number -VRN) அல்லது டேக் ஐடியை (Tag ID) வழங்கவும். இதனை தொடர்ந்து பேடிஎம் கஸ்டமர் சப்போர்ட் ஏஜென்ட், உங்களுடைய பேடிஎம் ஃபாஸ்டாக் ஆனது க்ளோஸ் செய்யப்பட்டதை உறுதி செய்வார்.
பேடிஎம் ஃபாஸ்டாக்கை டிஆக்டிவேட் செய்வதற்கான இன்னொரு வழி: பேடிஎம் ஆப்பை திறந்து ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும். பின்னர் ஹெல்ப் & சப்போர்ட் (Help & Support) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்து பேங்கிங் சர்வீசஸ் & பேமண்ட்ஸ் (Banking Services & Payments) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

இப்போது ஃபாஸ்டாக் (FASTag) என்பதற்கு செல்லவும். பின்னர் சாட் வித் அஸ் (Chat with us) என்கிற விருப்பத்த கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்யும்படி நிர்வாகியிடம் கோரவும். அவ்வளவு தான், உங்களுடைய பேடிஎம் ஃபாஸ்டாக் ஆனது க்ளோஸ் செய்யப்படும்.
ஆன்லைன் வழியாக புதிய ஃபாஸ்டாக்-ஐ வாங்குவது எப்படி? கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக அதிகாரப்பூர்வ மை ஃபாஸ்டாக் (My FASTag) ஆப்பை இன்ஸ்டால் செய்து, அதனுள் அணுக கிடைக்கும் பை ஃபாஸ்டாக் (Buy FASTag) என்பதன் வழியாக புதிய ஃபாஸ்டாக்-ஐ வாங்கலாம். அது நீங்கள் கொடுக்கும் முகவரிக்கே டெலிவரி செய்யப்படும்.
ஆன்லைன் வழியாக உங்கள் ஃபாஸ்டாக்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? மை ஃபாஸ்டாக் ஆப்பை திறந்து ஆக்டிவேட் ஃபாஸ்டாக் (Activate FASTag) என்பதை கிளிக் செய்யவும். பின்னர் அமேசான் (Amazon) அல்லது பிளிப்கார்ட்டை (Flipkart) தேர்ந்தெடுக்கவும். இப்போது ஃபாஸ்டாக் ஐடியை உள்ளிடவும் அல்லது க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும். பின்னர் உங்களுடைய வாகன விவரங்களை உள்ளிட்டு புதிய ஃபாஸ்டாக்-ஐ ஆக்டிவேட் செய்யவும்.
எந்தெந்த வங்கிகளின் வழியாக புதிய ஃபாஸ்டாக்-ஐ வாங்கலாம்?
ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கி (State Bank of India)
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank)
எச்டிஎப்சி வங்கி (HDFC Bank)
ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி (Fino Payments Bank)
ஐடிபிஐ வங்கி (IDBI Bank)
ஐடிஎஃப்சி வங்கி (IDFC Bank)
இந்தியன் வங்கி (Indian Bank)
ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி (Jammu and Kashmir Bank)
இன்டஸ்லேண்ட் வங்கி (Indusland bank)
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
கர்நாடகா வங்கி (Karnataka Bank)
கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank)
நாக்பூர் நகரிக் சககாரி வங்கி (Nagpur Nagarik Sahakari bank)
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
சர்ஸ்வத் வங்கி (Sarswat Bank)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
யெஸ் வங்கி (YES Bank)
திருச்சூர் மாவட்ட கூட்டுறவு வங்கி (Thrissur District Cooperative Bank)
யுசிஓ வங்கி (UCO Bank)
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
ஏஆயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)
மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra)
கனரா வங்கி (Canara Bank)
காஸ்மோஸ் வங்கி (Cosmos Bank)
பந்தன் வங்கி (Bandhan Bank)
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பெடரல் வங்கி (Federal Bank)
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank)
சிட்டி யூனியன் வங்கி (City Union Bank)


Click it and Unblock the Notifications