தடை அதை உடை.. Paytm ஆப்பிற்குள் மீண்டும் வந்த பிரபல வசதி.. கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுனீங்க!
அவ்ளோதான் "பேடிஎம் கதை முடிஞ்சது" என்று நினைத்தவர்களை எல்லாம் வாய் பிளக்க வைக்கும் படியாக.. பேடிஎம் (Paytm) நிறுவனம் இன்னொரு வேலையை பார்த்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பேடிஎம் நிறுவனமானது "மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப்" ஆக புதிய அவதாரம் எடுத்து போட்டியாளர்களை கதிகலங்க செய்தது!
இதற்காக என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) அனுமதியின் கீழ் 4 முக்கிய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து பேடிஎம் நிறுவனமானது தேர்ட் பார்ட்டி யுபிஐ ஆப் (Third Party UPI App) ஆக மாறியது.

இப்படி செய்வதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தால் தனது பேடிஎம் ஆப் வழியாக தொடர்ந்து யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை (UPI Payments Services) வழங்க முடியும். இதற்கிடையில் பேடிஎம் ஆப்பிற்குள் ஃபாஸ்டாக் (FasTag) வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேடிஎம் ஆப் வழியாகவே பயனர்கள் நேரடியாக ஃபாஸ்டாக் ரீசார்ஜ்களை செய்ய முடியும்.
முன்னதாக இந்த வசதி பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக அணுக கிடைத்தது. தற்போது யுபிஐ சேவைகளை வழங்க உதவும் அதே வங்கிகளின் வழியாக ஃபாஸ்டாக் ரீசார்ஜ் வசதியும் அணுக கிடைக்கிறது. ஒருவேளை பேடிஎம் ஆப் வழியாக ஃபாஸ்டாக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் அல்லது சந்தேகம் இருந்தால்.. அதை செய்வது எப்படி என்பதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ:

பேடிஎம் ஆப் வழியாக ஃபாஸ்டாக்-ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பிற்குள் சென்று, ரீசார்ஜ் மற்றும் பில் பேமண்ட்ஸ் (Recharge and Bill Payments) என்கிற விருப்பத்தின் கீழ் இருக்கும் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் (FasTag Recharge) என்பதை கிளிக் செய்யவும்.
2. பின்னர், அணுக கிடைக்கும் பல வகையான வங்கிகளில் இருந்து உங்களுக்கு ஃபாஸ்டாக்கை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுக்கவும். அந்த பட்டியலில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏயூ பேங்க், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க், பந்தன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா போன்ற வங்கிகள் இருக்கும்.

கூடவே கனரா வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஐஓபி ஃபாஸ்டாக், இந்தியன் வங்கி, இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, கர்நாடகா வங்கி, யூகோ வங்கி, தி சவுத் இந்தியன் வங்கி லிமிடெட், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பல வங்கிகளும் இருக்கும்.
3. மேற்கண்ட வங்கிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த பின்னர், உங்கள் ஃபாஸ்டாக் உடன் இணைக்கப்பட்ட வாகன எண்ணை உள்ளிட்டு, ப்ரொஸீட் (Proceed) என்பதை கிளிக் செய்யவும்
4. பின்னர் தேவையான விவரங்களை உறுதிப்படுத்தி, தேவையான தொகையையும் உள்ளிடவும்
5. கடைசியாக ப்ரொஸீட் டூ பே (Proceed to Pay) என்பதை கிளிக் செய்யவும்; அவளவுதான்!
பேடிஎம் ஆப் வழியாக எச்டிஎஃப்சி பேங்க் ஃபாஸ்டாக்-ஐ வாங்குவது எப்படி?
1. பேடிஎம் ஆப்பிற்குள் சென்று, மேலே உள்ள சேர்ச் பாரில் பை எச்டிஎஃப்சி ஃபாஸ்டாக் (Buy HDFC FASTag) என்று டைப் செய்து தேடி, அதை கிளிக் செய்யவும்
2. பின்னர் வாடிக்கையாளர் மற்றும் வாகன விவரங்களை உள்ளிடவும்
3. கடைசியாக பணம் செலுத்தி, எச்டிஎஃப்சி ஃபாஸ்டாக்-ஐ உங்கள் வீட்டு முகவரிக்கே டெலிவரி வாங்கிக்கொள்ளவும்.
யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளுக்காக பேடிஎம் நிறுவனமானது எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் யெஸ் பேங்க் (Yes Bank) உடன் இணைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் மூலம் மேற்கொள்ளப்பட்ட பேடிஎம்-ன் யுபிஐ பரிவர்த்தனைகள் தற்போது மேற்கண்ட 4 வங்கிகளின் வழியாக நடக்கிறது.
இந்த மாற்றத்தின் விளைவாக, பேடிஎம் நிறுவனமானது கூகுள் பே (Google Pay), மொபிக்விக் (Mobikwik), போன்பே (PhonePe) உட்பட மொத்தம் 24 மற்ற யுபிஐ பேமண்ட் ஆப்களுடன் போட்டியிட வேண்டும். அதாவது என்பிசிஐ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 25 தேர்ட் பார்ட்டி யுபிஐ ஆப்களில் பேடிஎம் ஆப்பும் ஒன்றாக செயல்படும்!


Click it and Unblock the Notifications








