Home
News

Paytm யூசர்களுக்கு மே 5 வரை யோகம்.. டிக்கெட் புக்கிங்கில் 25% தள்ளுபடி..

பேடிஎம் (Paytm) தனது யூசர்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு மே 5ஆம் தேதி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்து முன்பதிவு டிக்கெட்டுகளில் 25 சதவிகித அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி மட்டுமல்லாமல், குறிப்பிட்ட டிராவல் ஆபரேட்டர்களின் விமானத்திலோ, பேருந்திலோ பயணம் செய்தால் கூடுதலாக தள்ளுபடியும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் ஆப்பான (Digital Payment App) பேடிஎம், தனது யூசர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பேடிஎம் டிராவல் கார்னிவல் (Paytm Travel Carnival) என்னும் சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்துள்ளது. மே 5ஆம் தேதி வரை இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ள முடியும். கோடை விடுமுறையில் பல்வேறு நகரங்களுக்கு வேலைக்கு சென்றோர், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

Paytm யூசர்களுக்கு அடித்தது யோகம்.. டிக்கெட் புக்கிங்கில் 25% தள்ளுபடி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நேரத்தில் அதிகமான பயணங்கள் முன்பதிவு செய்யப்படுவதால், விமானம் (Flight), பேருந்து (Bus), ரயில் (Train) ஆகியவற்றில் பயணக் கட்டணம் சில தேதிகளில் அதிகமாகவே இருக்கும். இந்த நேரத்தில் 25 சதவிகிதம் ஆஃபர் கிடைத்தால், எப்படி இருக்கும். அதுபோன்ற ஆஃபரை பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

விமான டிக்கெட் முன்பதிவு தள்ளுபடி: இந்த பேடிஎம் டிராவல் கார்னிவல் ஆஃபர் மூலம், இண்டிகோ (IndiGo), ஸ்பைஸ்ஜெட் (IndiGo),கோஃபர்ஸ்ட் (GoFirst), விஸ்தாரா (Vistara), ஆகாசா ஏர் ( Akasa Air), ஏர் ஏசியா (AirAsia), ஏர் இந்தியா (Air India) ஆகிய விமான சேவை நிறுவனங்களில் உள்நாட்டில் முன்பதிவு செய்தால் 15 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம்.

அதேபோல சர்வதேச பயணங்களுக்கு முன்பதிவு செய்தால் 10 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடியை பேடிஎம், ஆர்பிஎல் பேங்க் (RBL Bank), யெஸ் பேங்க் (Yes Bank), ஹெச்எல்பிசி இந்தியா (HSBC India) பேங்க் கார்டுகள் மூலம் வழங்குகிறது. இந்த வங்கிகளில் கிரெட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கென ஆஃபர் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி உடன் மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயுதப்படை பணியாளர்களுக்கு வசதி கட்டணம் (Convenience Fee) பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து டிக்கெட் முன்பதிவு தள்ளுபடி: இந்த ஆஃபர் மூலம் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்து ஆப்ரேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில் குறிப்பிட்ட சில பேருந்து ஆப்ரேட்டர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு தள்ளுபடி: இந்த பேடிஎம் ஆஃபர் மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், பேமெண்ட் கேட்வே கட்டணம் (Payment Gateway Charge) வசூலிக்கப்படாது. இதில் தட்கல் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.

இந்த அனைத்து முன்பதிவு ஆஃபர்களுக்கும் கேன்சல் புரெடெக் கவர் (Cancel Protect Cover) என்னும் வசதி வழங்கப்படுகிறது. இதில் டிக்கெட் விலைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட கட்டணத்தை கட்டினால், நீங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது முழு தொகையும் திருப்பி அனுப்பப்படும். இல்லையென்றால், பிடித்தம்போக மீதி அனுப்பப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm discounts on flights, buses and trains tickets until May 5 here full detail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X