Home
News

கழட்டிவிட்ட Paytm.. மார்ச்.1 வந்த அப்ரூவல்.. Axis பேங்க்தான் கதி.. RBI கெடுவுக்கு முன்பே முறிவு!

மத்திய அரசின் ஆர்பிஐ கெடுவுக்கு முன்பே பேடிஎம் (Paytm) மற்றும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) ஆகியவற்றின் இடையேயான ஒப்பந்தங்கள் முறித்து கொள்ளபட்டன. அதற்கான அப்ரூவல் மார்ச் 1ஆம் தேதி வழங்கப்பட்டுவிட்டது. இதனால், என்னென்ன மாறும்? விவரங்கள் இதோ.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) கடுமையான கட்டுப்பாடுகளால் பேடிஎம் நிறுவனம் திக்குமுக்காடி போய்விட்டது. விதிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், பல்வேறு ஈக்கட்டான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட் பேங்க்கின் நோடல் அக்கவுண்ட்டாக ஆக்சிஸ் பேங்க்கை கொண்டுவருவது.

கழட்டிவிட்ட Paytm.. இனி Axis பேங்க்தான்.. RBI கெடுவுக்கு முன் முறிவு!

பேடிஎம் ஈகாமர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Paytm E-Commerce Private Limited) என்னும் பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Pai Platforms Private Limited) என்று மாற்றுவது. இப்படி பல முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால், ஆர்பிஐ கெடுவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க மட்டுமே முடியும். அதைத் தவிர வேறெந்த மாற்றமும் வராது
என்பதை இப்போது புரிந்துகொண்டுவிட்டது.

ஏனென்றால், பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு மார்ச் 15ஆம் தேதி வரையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்பதில் ஆர்பிஐ திட்டவட்டமாக இருக்கிறது. அதே நேரத்தில் பேடிஎம் கியூஆர் கோட், பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் போன்றவற்றை மற்ற வங்கிகள் மூலம் பயன்படுத்தி கொள்ளுமாறு பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தவும் செய்தது.

ஆகவே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைகள் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு கிடைக்க எந்த வாய்ப்பும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் காலஅவகாசம் மட்டுமே கொடுக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், பேடிஎம் நிறுவனம் நிறுவனம் எடுத்துள்ள முடிவானது, அதன் காலக்கெடுவுக்கு முன்னதாக நமக்கு இறுதி முடிவை தெரியப்படுத்திவிட்டது.

கழட்டிவிட்ட Paytm.. இனி Axis பேங்க்தான்.. RBI கெடுவுக்கு முன் முறிவு!

பேடிஎம் நிறுவனமும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் நிறுவனமும் தங்களது அனைத்து ஒப்பந்தங்களையும் முறிந்து கொள்வதாக அறிவித்துவிட்டன. இதற்கான அப்ரூவலை பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (One 97 Communications Ltd) மார்ச் 1ஆம் தேதி கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் தரப்பில், பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனங்களின் இடையேயான ஒப்பந்தங்களை முறித்து கொள்வதற்கும், பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாகம் சுதந்திரமாக செயல்படவும், அதன் பங்குதாரர்கள் ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்கும் முடிவுகள் மற்றும் திருத்தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2024 தேதி அன்று அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பேடிஎம் ஆப் மூலம் வழங்கப்படும் பேடிஎம் கியூஆர், பேடிஎம் சவுண்ட் பாக்ஸ், பேடிஎம் கார்டு மெஷின் போன்ற சேவைகள் உட்பட அனைத்தும் தடையின்றி தொடரும். பேடிஎம் அதனுடைய நோடல் கணக்கை கடந்த மாதம் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியது.

இதன் மூலம் தடையற்ற சேவைகளை இப்போது உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான புதுமை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கான தடை கட்டாயம் இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm Discontinue Agreements With Paytm Payments Bank Approved on March 1 Ahead RBI Deadline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X