Home
News

அடேங்கப்பா.. போன்பே, கூகுள் பே காட்டுல மழை தான்.. தினசரி பேடிஎம் ஆப் டவுன்லோடு சரிவு..

இந்தியாவில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதிலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயல்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் செயலிக்கான தினசரி சராசரி பதிவிறக்கங்கள், கடந்த வாரம் 1.4 லட்சமாக குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பேடிஎம் செயலிக்கான தினசரி பதிவிறக்கங்கள் குறைந்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனமான 'ஆப்ட்விக்' தரவுகள் தெரிவிக்கின்றன.

கூகுள் பே காட்டுல மழை தான்..  தினசரி பேடிஎம் ஆப் டவுன்லோடு சரிவு..

அதாவது பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கின் செயல்பாட்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முழுமையான தடை விதித்துள்ளது.. எனவே பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தற்போது கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் பேடிஎம் செயலி பயன்பாட்டில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளது. அதாவது பேடிஎம் பேமெண்ட் பேங்க் செயல்பாட்டுக்குத் தான் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மற்றபடி பேடிஎம் யுபிஐ செயலியை வழக்கம் போல பயன்படுத்த முடியும். இருந்தபோதிலும் இந்த குழப்பம் காரணமாக வாடிக்கையாளர்கள் பலர் வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.

அதாவது ஏற்கனவே சில கடைகளில் பேடிஎம் ஸ்டிக்கர், ஸ்பீக்கர் பாக்ஸ் போன்றவை அகற்றப்பட்டுள்ளது. சிலர் இதில் பணப்பரிமாற்றம் செய்யக் கூட தயக்கம் காட்டுகின்றர். இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் வீழ்ச்சி மற்ற நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்ட்விக் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், கடந்த ஜனவரி 24 முதல் 31-ம் தேதி வரையான காலத்தில், கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் (Paytm) செயலிக்கான தினசரி சராசரி பதிவிறக்கங்கள் 2.4 லட்சம் என்ற அளவில் இருந்தன. ஆனால் இந்த மாதம் 1 முதல் 7-ம் தேதி வரையான காலத்தில் பேடிஎம் செயலியின் தினசரி சராசரி பதிவிறக்கங்கள் 1.4 லட்சமாக சரிந்து உள்ளது.

ஆனால் இதே பரிவில் செயல்பட்டு வரும் போன்பே (PhonePe) நிறுவன செயலியின் தினசரி சராசரி பதிவிறக்கங்கள், மதிப்பீட்டு காலத்தில் 4.4 லட்சத்தில் இருந்து 5.5 லட்சமாக உயர்ந்துள்ளது. பின்பு பிம் (BHIM) செயலி 3.5 லட்சம், கூகுள் பே (Google Pay) கிட்டத்தட்ட 2 லட்சம் மற்றும் மொபிகுவிக் 45,000 தினசரி பதிவிறக்கங்களை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே காட்டுல மழை தான்..  தினசரி பேடிஎம் ஆப் டவுன்லோடு சரிவு..

மேலும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் போன்பே மற்றும் கூகுள் பே செயலிகளின் 25,000 பதிவிறக்கங்களுடன் ஒப்பிடுகையில், பேடிஎம் செயலி பதிவிறக்கங்கள் வெறும் 8000-த்தில் குறைவாக காணப்பட்டது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பேடிஎம் செயலியை விட போன்பே, கூகுள் பே செயலிகளை தான் மக்கள் அதிகம் பதிவிறக்கம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல் அரசிடம் பேடிஎம் நிறுவனம், பேடிஎம் ஈகாமர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Paytm E-Commerce Private Limited) எனும் பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Pai Platforms Private Limited) என்று மாற்றுவதற்கான ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும் ஓ.என்.டி.சி.இ நெட்வொர்க்கில் உள்ள 'பிட்சிலா' என்ற வணிக தளத்தை வாங்கி உள்ளது பேடிஎம் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Paytm daily downloads drop, PhonePe, Google Pay gain: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X