FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?

|

டோல் பிளாசாக்களில் ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக பணம் செலுத்த உதவுகிறது இந்த "பாஸ்ட் டேக்" சேவை. குறிப்பாக பாஸ்ட் டேக் முறை இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள சேவை

பயனுள்ள சேவை

அதாவது வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள டிஜிட்டல் ஸ்டிக்கர் வாயிலாக, ஓட்டுனர் கணக்கில் இருந்து அரசின் கணக்குக்கு சுங்க கட்டணம் சென்று சேர்கிறது. மேலும் இந்த பாஸ்ட் டேக் சேவை அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

BSNL வாரி வழங்கும் '600ஜிபி டேட்டா' ப்ரீபெய்ட் திட்டம்.. விலை இவ்வளவு தான் ஆனா நன்மை ஏராளம்BSNL வாரி வழங்கும் '600ஜிபி டேட்டா' ப்ரீபெய்ட் திட்டம்.. விலை இவ்வளவு தான் ஆனா நன்மை ஏராளம்

நெடுஞ்சாலை பயணம்

நெடுஞ்சாலை பயணம்

நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது சுங்கச்சாவடியில் நீண்ட வரிசைகளில் நீங்கள் காத்திருப்பது என்பது சற்று எரிச்சலை உருவாக்கக்கூடிய விஷயம் தான். அதுவும், நீங்கள் வார இறுதி பயணத்தில் இருக்கும்போது இந்த எரிச்சல் இரட்டிப்பாக மாறக்கூடும். இந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்திய அரசு கட்டாய பாஸ்ட் டேக் முறையை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?

மோசடி கும்பல்?

மோசடி கும்பல்?

இந்நிலையில் பாஸ்ட் டேக் நடைமுறையில் மோசடி கும்பல் புகுந்து பணம் திருடுவதாக வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பல சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் சிக்னலில் இருக்கும் சிறுவன் கையில், ஸ்மார்ட் கைக்கடிகாரம் (ஸ்மார்ட் வாட்ச்) அணிந்துள்ளான். குறிப்பாக அவன் சிக்னலில் நிற்கும் கார்களின் கண்ணாடியை துடைத்துவிட்டு பணம் பெறுகிறான்.

பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஸ்மார்ட் கைக்கடிகாரம்

ஸ்மார்ட் கைக்கடிகாரம்

அப்படி கண்ணாடியை துடைக்கும்போது அவன் கையில் உள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் வாயிலாக, பாஸ்ட் டேகை ஸ்கேன் செய்து நூதன முறையில் பணம் திருடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதேபோல் இந்த நூதன திருட்டில் மிகப் பெரிய கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும் அதில்
கூறப்பட்டது.

5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?

 தவறான தகவல்

தவறான தகவல்

ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ எனப்படும் இந்திய தேசிய பணப்பரிமாற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வீடியோ போலியானது, அதில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.

53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?

திருடவே முடியாது

குறிப்பாக அந்த வீடியோவில் குறிப்பிடுவதை போன்று ஸ்மார்ட் கைக்கடிகாரம் மூலம் பாஸ்ட் டேக் பணத்தை திருடவே முடியாது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிகர்கள் வாயிலாக மட்டுமே பணத்தை பெற முடியும்.

Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள "இதை" பண்ணிடுங்க! இல்லனா? கெடு வைத்த Microsoft!

குறிப்பாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே பாஸ்ட் டேக் உருவாகப்பட்டது. எனவே அது மிகவும் பாதுகாப்பானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முடிவு பண்ணிட்டோம் நல்லதாவே வாங்குவோம்- இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஆகச் சிறந்த லேப்டாப்கள்!முடிவு பண்ணிட்டோம் நல்லதாவே வாங்குவோம்- இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஆகச் சிறந்த லேப்டாப்கள்!

90 சதவீத வாகனங்கள்

90 சதவீத வாகனங்கள்

அதேபோல் இப்போது 90 சதவீத வாகனங்கள் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டியதை உறுதிப்படுத்திக் கொண்டே சுங்கச்சாவடிகளை கடக்கின்றன. மேலும் கார், பேருந்து, லாரி போன்ற இலகு மற்றும் கனரக புதிய வாகனங்கள் வாங்கப்படும்போது ஷோரூம்களிலேயே
இந்த பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனங்கள் உரிமையாளர்களிடம் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Paytm clarified that the viral video of the boy scanning FASTag and stealing money is fake: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X