நீங்களுமா பேடிஎம்? மொபைல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம்! குமுறும் வாடிக்கையாளர்கள்

|

இந்தியாவில் போன்பே, கூகுள் பே செயலிகளை விட அதிகளவில் பேடிஎம் செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த பேடிஎம் செயலியில் பல்வேறு சேவைகள் கிடைக்கும் என்பதால், மக்கள் அதிகளவில் இந்த செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

செயலாக்கக் கட்டணம் வசூல்

செயலாக்கக் கட்டணம் வசூல்

அதாவது சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி பேடிஎம் செயலி ஆனது செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது (processing fee). குறிப்பாக
இதனை உறுதி செயல் சில வாடிக்கையாளர்கள் மொபைல் ரீசார்ஜ் செய்து பார்த்துள்ளனர். அவர்களுக்கு ரூ.1 முதல் ரூ.6 வரை செயலாக்கக் கட்டணம்செலுத்த வேண்டும் என காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை 91 மொபைல் வலைத்தளம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார்- உஷார்- "பப்ஜி மோகம்" தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்- சடலத்தை வீட்டில் பதுக்கி தந்தையிடம் கட்டிய கதை!

மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் வசூல்

மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் வசூல்

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு வாடிக்கையாளரிடம் எந்த செயலாக்கக் கட்டணமும் வசூலிக்காது என்று பேடிஎம் நிறுவனம் கூறியது. ஆனால் தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் வசூல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

சர்ச்சையில் சிக்கியது

சர்ச்சையில் சிக்கியது

இதற்கு முன்பு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே கட்டணம் வசூலித்து சர்ச்சையில் சிக்கியது. அதை தொடர்ந்து போன்பே நிறுவனம் கட்டண வசூலில் ஈடுபட்டது. தற்போது பேடிஎம் நிறுவனமும் இது போன்ற ஒரு புதிய முறையை கொண்டுவந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னை மக்களே என்ஜாய்: 224 இடங்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் நிறுவிய அரசு- ACT அதிவேக இணையம் ஃப்ரீசென்னை மக்களே என்ஜாய்: 224 இடங்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் நிறுவிய அரசு- ACT அதிவேக இணையம் ஃப்ரீ

வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

பேடிஎம் நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கைக்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் இரட்டை வேடம் போடுகிறது என்று பல்வேறு மக்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சிலர் இந்த நிலமை தொடர்ந்தால் பேடிஎம் செயலியை பயன்படுத்த மாட்டோம் என்று கூறுகின்றனர்.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

 6 ரூபாய் கூடுதல் கட்டணம்

6 ரூபாய் கூடுதல் கட்டணம்

91 மொபைல் தளத்தில் இருக்கும் ஒருவர் பேடிஎம் செயலியை பயன்படுத்தி ரூ.148 ஏர்டெல் திட்டத்தை ரீசார்ஜ் செய்தபோது, அதற்கு செயலாக்கக் கட்டணமாக ரூ.1 வசூலிக்கப்பட்டுள்ளது. பின்பு ஏர்டெல் நிறுவனத்தின் உயர்வான திட்டத்தை தேர்வு செய்தபோது 6 ரூபாய் கூடுதல் கட்டணம் காட்டப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் கவலை: பழைய மாடலின் விலையை உயர்த்திய ஆப்பிள்- காரணம் என்ன தெரியுமா?இந்திய வாடிக்கையாளர்கள் கவலை: பழைய மாடலின் விலையை உயர்த்திய ஆப்பிள்- காரணம் என்ன தெரியுமா?

 கூகுள் பே,போன்பே, பேடிஎம்

கூகுள் பே,போன்பே, பேடிஎம்

தற்போது கூகுள் பே,போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது,கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. இப்போது சிறிய கடைகளில் கூட இந்த செயலிகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பொருட்களை வாங்க முடியும். மேலும் பல அசத்தலான சலுகைகளை வழங்கும் பேடிஎம் நிறுவனம், தற்போது மொபைல் ரீசார்ஜ் செய்ய செயலாக்கக் கட்டணத்தை கேட்பது பயனர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Paytm charged extra if mobile recharge: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X